அதிகமான மக்கள் தற்போது இ-பேமென்ட் முறைகள் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை சார்ந்து இருப்பதால், ஆன்லைன் மோசடி வழக்குகள் அதிகரித்துள்ளன. இதற்காக சான்றுகளும் அன்றாடம் நாம் காணும் செய்தி வாயிலாக அறிந்து கொள்ள முடியும்.
* QR குறியீட்டை மோசடி குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
* உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருங்கள்
* டிஜிட்டல் மையமான உலகில் கவனமாக இருங்கள்
மோசடி செய்பவர்கள் பயனர்களை சிக்க வைப்பதற்கும், அவர்களின் வங்கி விவரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், அவர்களை ஏமாற்றுவதற்கும் தனித்துவமான வழிகளைக் கண்டறிந்துள்ளனர். சமீபத்தில், QR குறியீட்டை ஸ்கேன் செய்து மக்கள் பணத்தைப் பறிகொடுத்ததாக பல வழக்குகள் பதிவாகி உள்ளன.
ஆனால் அவர்கள் எதையும் திரும்பப்பெற முடியவில்லை. அவர்களின் கணக்குகளில் இருந்து பணம் கழிக்கப்பட்டது. QR குறியீடு மோசடி மூலம் மக்களை ஏமாற்றுவதற்காக OLX போன்ற மிகப் பிரபலமானத் தளங்களை மோசடி செய்பவர்கள் பயன்படுத்துகின்றனர்.
உண்மையில், OLX நிறுவனமே இந்த மோசடிகளுக்கு எதிராக பயனர்களை எச்சரித்துள்ளது. இது எவ்வாறு இயங்குகிறது என்றும், ஆன்லைன் மோசடிகளுக்கு பலியாகாமல் உங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும் நீங்கள் அறிந்து வைத்திருப்பது அவசியமாகிறது. எனவே, உங்களுக்காக சில வழிமுறைகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
மோசடி செய்பவர்கள் பணத்தை திருட QR குறியீட்டை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள்?
ஆன்லைன் மோசடி செய்பவர்கள் QR குறியீட்டை அனுப்பி, வங்கித் தொடர்பான பொய் காரணங்களைக் கூறி, உங்களுக்கு பணப் பரிசுக் கிடைத்திருக்கிறது என்று கூறுவார்கள். தொடர்ந்து ஒரு க்யூ ஆர் குறியீட்டை அனுப்பி, அதை ஸ்கேன் செய்யும்படி மக்களைக் கேட்கிறார்கள்.
நீங்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்தவுடன், அவர்கள் சலுகை ஏதேனும் கொடுப்பதாகக் கூறியிருந்தால், அதற்கு மாற்றாக உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்படும். மோசடி செய்பவர்கள் உங்கள் வங்கிக் கணக்கை அணுகலாம் மற்றும் பல வழிகளிலான பரிவர்த்தனைகள் மூலம் உங்கள் பணத்தை திருடலாம்.
ஆன்லைன் மோசடிகள் மூலம் பணத்தை திருடுவதற்கான பொதுவான வழிகளில் QR குறியீடு முறையும் ஒன்றாகும். எனவே, யாராவது உங்களுக்கு வாட்ஸ்அப் அல்லது வேறு எந்த தளத்தில் இருந்தும், QR குறியீட்டை அனுப்பி, பணத்தைப் பெறுவதற்காக அதை ஸ்கேன் செய்யும்படி கேட்டால், அதை தவிர்ப்பதே உங்கள் மனதில் தோன்றும் முதல் எண்ணமாக இருக்க வேண்டும்.
ஆன்லைன் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
1. உங்கள் UPI ஐடி அல்லது வங்கிக் கணக்கு விவரங்களை தெரியாத நபர்களுடன் ஒருபோதும் பகிர வேண்டாம்.
2. வங்கி சாராத அந்நியர்களிடமிருந்து பெறப்பட்ட எந்த QR குறியீட்டையும் ஸ்கேன் செய்ய வேண்டாம்.
3. OTP எப்போதும் ரகசியமானவை என்பதை மனதில் கொள்ளுங்கள். உங்கள் உள்நுழைவு விவரங்களை அங்கீகரிக்க OTP பயன்படுவதால், அதை எவருடனும் பகிர வேண்டாம்.
4. நீங்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்யும்போதோ அல்லது தெரியாத நபருக்கு பணம் அனுப்பும்போதோ அல்லது பெறும்போதோ, பயனர் உண்மையானவரா என்பதைச் சரிபார்க்கவும். நீங்கள் OLX இல் எதையாவது விற்கிறீர்கள் என்றால், வாங்குபவர்களின் சுயவிவரப் புகைப்படம், பெயர், தொலைபேசி எண் போன்ற தகவல்களை முதலில் ஆராய்ந்து பார்க்கவும்.
5. நீங்கள் UPI முறையைப் பயன்படுத்தினால், அதை ஒரு குறியீட்டுடன் பாதுகாக்கவும். BHIM, GooglePay, PhonePe உள்ளிட்ட அனைத்து UPI கட்டண முறைகளும் பயனர்கள் பாதுகாப்பு பின்னை அமைக்க அனுமதிக்கின்றன. இதனால் ஒவ்வொரு முறை பயன்பாட்டைத் திறக்கும்போதும், பயன்பாடு முதலில் குறியீட்டைக் (PIN) கேட்கும்.
6. உங்களுக்குத் தெரியாத நபர்களுடன் மேற்கொள்ளும் பணப்பரிமாற்றத்தை தவிர்க்க வேண்டும். பணமில்லா பரிவர்த்தனைகள் எப்போதும் சிறந்தவை என்றாலும், நீங்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே இந்த சைபர் குற்றவாளிகள் இடமிருந்து உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.
மேலும் படிக்க:
வங்கி மோசடி: அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள்; பாதுகாப்பது எப்படி
உங்கள் ஆதார் அட்டைப் போலியாக இருக்கக்கூடும்- உடனே check பண்ணுங்க!
Share your comments