பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுக்கான தேதியை அறிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, பள்ளிகளின் வகுப்புகளை பொறுத்து 5 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு வெளியிட, அரசு அறிவித்துள்ளது.
காலாண்டு தேர்வு எப்போது நடைபெறும்?
பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் முக்கியமாக 3 தேர்வுகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு மற்றும் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், தேர்வு முடிவடைந்து மாணவர்களுக்கு சற்று ஓய்வு கொடுக்கும் வகையில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்ததாண்டுக்காக காலாண்டு தேர்வுக்கான பட்டியலை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
தேர்வுக்கான தேதி அறிவிப்புகள்:
இதன் படி, செப்டம்பர் மாத நாட்காட்டி தகவலின் படி, பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு தேதியை பொறுத்தவரை 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 14ம் தேதியும், 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 18ம் தேதியும் தேர்வுகள் துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 15ம் தேதி துவங்க உள்ளதாகவும் அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 8 பிரிவுகளில், 153 மத்திய வேலைவாய்ப்பு: இதோ முழு விவரம்! Apply Now
காலாண்டு தேர்வுக்கு பின் விடுமுறை அளிக்க:
காலாண்டு தேர்வுகள் முடிவடைந்து 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 22ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 10 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 4ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 27 தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாட்கள் மட்டும் காலாண்டு விடுமுறை விடப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாணவர்களுக்கும் அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும் படிக்க:
செப்டம்பர் மாதத்தில் மட்டும் வங்கிக்கு இவ்வளவு நாட்கள் விடுமுறையா?
Share your comments