தமிழகத்தில் உள்ள இரயில்வே ஊழியர்கள் தமிழ் கற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில் பெட்டியை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார். அப்போது இதனை அவர் தெரிவித்தார்.
வந்தே பாரத் இரயில் (Vandhe Bharath Train)
வந்தே பாரத் ரயில் பெட்டிகள் 160 கி.மீ வேகத்தை தாங்கக்கூடிய திறன் பெற்றவை. இந்த தொழிற்சாலையில் 102 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயில் பெட்டிகளின் மாதிரிகளை பார்வையிட்ட அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இத்தொழிற்சாலையில் தயாரிக்க செய்யப்பட்ட 12 ஆயிரமாவது ரயில் பெட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். அதன் பின் பேசிய அமைச்சர், இரயில்வே தனியார்மயம் ஆக்கப்படாது. தொழிநுட்பங்களை பயன்படுத்தி ரயில்வேத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
2022-23 மத்திய பட்ஜெட்டில் 400 கூடுதல் வந்தே பாரத் ரயில்கள் வாங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் ஒதுக்கீட்டின்படி, 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலுக்கு ரூ.120 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் மொழி (Tamil Language)
தமிழகத்தில் உள்ள ரயில்வே ஊழியர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதால், இரயில் நிலையங்களில் பொதுமக்களுக்கு சிரமம் இருக்காது.
மேலும் படிக்க
ஆகஸ்ட் 2023 க்குள் '75 வந்தே பாரத்' ரயில்கள் இந்தியா தயாரிக்கும்
வேளாண் தொழிற்சாலை அமைக்க வேண்டும்: பா.ம.க., தலைவர் வேண்டுகோள்!
Share your comments