ரயில்வே ஆட்சேர்ப்பு 2022 : வேலை தேடுபவர்களுக்கான நல்ல செய்தியாகும். மத்திய ரயில்வேயின் ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு (RRC/CR) ஏராளமான காலியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் படிக்கலாம்.
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, வெல்டர்கள், பெயிண்டர்கள், எலக்ட்ரீஷியன்கள், ஃபிட்டர்ஸ், கார்பெண்டர்கள், டெய்லர்கள், லேபரேட்டரி அசிஸ்டெண்ட்ஸ் மற்றும் டர்னர்ஸ் ஆகிய பணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ரயில்வே ஆட்சேர்ப்பு 2022 விவரங்கள் (Details of Railway Recruitment 2022:)
மும்பை கிளஸ்டர்: சுமார் 1650
புசாவல் கிளஸ்டர்: சுமார் 410
புனே கிளஸ்டர்: சுமார் 150
நாக்பூர் கிளஸ்டர்: சுமார் 110
சோலாப்பூர் கிளஸ்டர்: சுமார் 75
மொத்தம் – 2000த்திற்கும் மேர்பட்ட பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க கீழே படிக்கவும்.
ரயில்வே ஆட்சேர்ப்பு 2022 இன் கல்வித் தகுதி (Educational Qualification of Railway Recruitment 2022)
ரயில்வே ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வில் அல்லது அதற்கு சமமான (10 + 2 தேர்வு முறை) குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள், தொழிற்பயிற்சிக்கான தேசிய கவுன்சில் அல்லது தொழில் பயிற்சிக்கான மாநில கவுன்சில் வழங்கிய, அறிவிக்கப்பட்ட வர்த்தகத்தில் தேசிய வர்த்தகச் சான்றிதழையும் பெற்றிருக்க வேண்டும்.
ரயில்வே ஆட்சேர்ப்பு 2022க்கான வயது வரம்பு (Age Limit for Railway Recruitment 2022)
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் ஜனவரி 17, 2022 அன்று 15 வயது முதல் 24 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
ஒதுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
ரயில்வே ஆட்சேர்ப்பு 2022 க்கு எப்படி விண்ணப்பிப்பது ? (How to Apply for Railway Recruitment 2022)
தகுதியும் விருப்பமும் உள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு அறுவுறுத்தப்படுகிறார்கள்: https://www.rrccr.com/
ரயில்வே ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி எப்போது? (Last Date to apply)
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 16, 2022 மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
ரயில்வே ஆட்சேர்ப்பு 2022 பற்றிய தகவல்
இந்திய ரயில்வேயில் ஃபிட்டர்கள், வெல்டர்கள், கார்பெண்டர்கள், பெயிண்டர்கள், டெய்லர்கள், ஆய்வக உதவியாளர்கள் போன்ற பல்வேறு பிரிவுகளில் 2000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை எனவே இந்த பணியிடங்களை நிரப்ப, ஆட்சேர்ப்பு நடக்கும். அதனால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே கடைத்தேதி வரை காத்திருக்காமல், விண்ணப்பிக்க முந்துங்கள்.
மேலும் படிக்க:
Share your comments