தென்மேற்கு பருவாற்று மற்றும் வெப்பச்சலனம் காரனமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவகாற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குள் தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் லேசான மழையும், அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், நீலகிரி,கோவை,தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
- மத்திய கிழக்கு வங்ககடல் பகுதியில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக ஜூன் 9 முதல் 11 வரை மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திரா கடலோர பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் வீசும்.
- ஜூன் 9 முதல் ஜூன் 13 வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசும்.
- ஜூன் 11 மற்றும் ஜூன் 12 லட்சத்தீவு, கேரளா மற்றும் கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் வீசும்.
- ஜூன் 13 கேரளா மற்றும் கர்நாடக கடலோரப்பகுதி சூறாவளி காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் வீசும்.
- இந்த சமயங்களில் குளச்சல் கடல் பகுதி முதல் தனுஷ்கோடி வரை ஒருசில நேரங்களில் கடல் அலை 3.0 முதல் 3.4 மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும் இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க...
தஞ்சை காவிரி டெல்டா பகுதி குடிமராமத்து பணியில் 1 லட்சம் பணியாளர்கள்
தீவிரமாகும் பருவமழை - அணைகள் திறப்பு - சாகுபடி பணிகள் மும்முரம்
Share your comments