1. செய்திகள்

தஞ்சை காவிரி டெல்டா பகுதி குடிமராமத்து பணியில் 1 லட்சம் பணியாளர்கள் - ககன்தீப் சிங் பேடி!

Daisy Rose Mary
Daisy Rose Mary

தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பணியாளர்களை தூர்வாரும் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளைவேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசியதாவது.

கூடுதலாக 300 இயந்திரங்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளில் சுமார் 260 இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பணிகளை விரைந்து முடித்திடும் வகையில் கூடுதலாக 300 இயந்திரங்கள் வரவழைக்கப்படவுள்ளன. ஜூன் 12ஆம் தேதி அன்று மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிகள் வரை முழுவதும் சென்றடையும் வகையில் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

3.4 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி இலக்கு

நடப்பாண்டில் குறுவை சாகுபடி பருவத்திற்கு 3.4 லட்சம் ஏக்கர் பரப்பளவு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சுமார் 500 கோடி ரூபாயும், தூர்வாரும் திட்டத்தின் கீழ் சுமார் 67 கோடி ரூபாயும் தமிழ்நாடு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. முதலில் தண்ணீர் வரும் கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு தூர்வாரும் பணிகள் நடைபெறும்

தமிழ்நாடு அரசு குறுவை சாகுபடிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கிராமவிதை திட்டத்தின் கீழ் விதைகள் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. மானிய விலையில் நுண்ணூட்டச்சத்து உரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாய பணிகளுக்கு தேவையான இயந்திரங்கள் மானிய விலையில் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு லட்சம் பணியாளர்களை ஈடுப்படுத்த முடிவு

விவசாயிகளின் நலனுக்காக இயந்திர தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க பிற மாவட்டங்களிலிருந்தும் வேளாண்மை பணிகளுக்கு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 77 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஆகியோரிடம் ஆலோசனை செய்து தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பணியாளர்களை தூர்வாரும் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அனைத்து விவசாய தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள்

மேலும் அனைத்து பகுதிகளுக்கும் செல்லக்கூடிய சிறிய வாய்க்கால்கள் தூர்வாரப்படும். கிராமங்களில் உள்ள குளங்கள் அனைத்தும் தூர்வாரப்படும். இது மழைக்காலங்களில் நீரை சேமித்து வைத்து பாசனத்திற்கு பயன்படும். மேலும் தூர்வாரும் பணிகள் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் முறையான வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது 151 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் தேவையிருப்பின் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை உருவாக்கிக் கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் தரப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பொதுப்பணித்துறை அலுவலர்கள் முறையாக திட்டமிட்டு, தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்கப்படும் என்று வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறினார்

தூர்வாரும் பணிகள் ஆய்வு

  • முன்னதாக தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு வட்டம், புதூர் கிராமம், காரிமுத்து ஏரி குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூபாய் 36.50 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி
  • ஒரத்தநாடு வட்டம், நெடுவாக்கோட்டை கிராமம், கல்யாண ஓடை வாய்க்கால் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூபாய் 18 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி
  • பட்டுக்கோட்டை வட்டம், வீரக்குறிச்சி கிராமம், இரண்டாம் எண் வாய்க்கால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 4.8 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி
  • பட்டுக்கோட்டை வட்டம், மகாராஜசமுத்திரம் கிராமம், மகாராஜசமுத்திரத்தில் ரூபாய் 24 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை வேளாண் வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் படிக்க...

தீவிரமாகும் பருவமழை - அணைகள் திறப்பு - சாகுபடி பணிகள் மும்முரம்

பாசனத்திற்காக பாவனிசாகர், அழியாறு அணைகள் திறப்பு!

English Summary: One lakh employees will be recruited Under the National Rural Employment Guarantee Scheme for rehabilitation work Published on: 09 June 2020, 07:02 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.