Rain coat for goats
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த விவசாயி ஒருவர் தான் வளர்க்கும் ஆடு மேய்ச்சலுக்கு செல்லும் போது மழையில் நனையாமல் இருக்க சாக்கை உடையாக அணிந்து விடுகிறார். கால்நடைகள் மீது அக்கறை கொண்ட அவரின் செயலையும், “ரெயின் கோட்” போட்டு மேய்ச்சலில் ஈடுபடும் ஆடுகள் குறித்தும் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஆடுகளுக்கு ரெயின் கோட்
ஒரத்தநாடு அருகே உள்ள குலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் வயது 70. விவசாயியான இவர் ஆடு, மாடு, கோழி என கால்நடைகள் வளர்ப்பில் ஆர்வமாக ஈடுப்பட்டு வருகிறார். இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழை பொழிந்து வருவதால் மேய்சலுக்கு சென்ற அவரது ஆடுகள் மழையில் நனைந்து சிரமத்துக்கு ஆளானது. தன்னுடைய பிள்ளைகளாக கருதி ஆடு வளர்ப்பில் ஈடுப்பட்டு வரும் கணேசனுக்கு ஆடு மழையில் நனைந்து ஈரத்தில் நடுங்குவதை பார்க்க மனமில்லை. மேய்ச்சலுக்கு போகும் ஆடு மழையில் நனையாமல் இருக்க என்ன செய்யலாம் என யோசித்தவருக்கு ஆடுக்கு ”ரெயின் கோட்” போட்டால் என்னவென்று தோன்றியிருக்கிறது.
சட்டனெ அதை பிடித்து கொண்டவர் அரிசி சாக்கினை ரெயின் கோட்டாக்கி ஆடுகளுக்கு அணிந்து விட்ட பிறகு தினமும் மேய்ச்சலுக்கு அனுப்பி வருகிறார். இந்த செயலை பார்த்தவர்கள் அவரை நெகிழ்ந்து பாராட்டியதுடன் சாக்கு அணிந்திருந்த ஆடுகளை போட்டோ எடுத்து ”ரெயின் கோட்” என சமூக வலைதளங்களில் பதிவிட்டது நெட்டிசன்களை பெரிதும் கவர்ந்தது.
ரொம்ப தூரம் செல்லாமல் இருக்க ஆட்டின் முன்காலில் ஒன்றை முழங்காலோடு மடக்கி வைத்து கட்டி விட்டு மேய்ச்சலுக்கு அனுப்பும் மனிதர்களுக்கு மத்தியில் ஆடு நனையாமல் இருக்க ”ரெயின் கோட்” போட்ட கணேசன் உயர்ந்த மனம் கொண்டவராகவும் பார்க்கப்படுகிறார்.
மேலும் படிக்க
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தில் முக்கிய உத்தரவு!
வெளுத்து வாங்கும் கனமழை: விவசாயிகளே விரைவாக பயிர் காப்பீடு செய்யுங்கள்!
Share your comments