சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.
அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதயானது இருக்கிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 31-ம் தேதியான (இன்று) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல அடுத்த மூன்று நாட்களுக்கு, அதாவது, ஏப்ரல் 1, 2, 3-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
நேற்றைய தினமான 30-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் க்ளென்மார்கனில் 2 செ.மீ., கோவை மாவட்டம் வால்பாறை, கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு, நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தை ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
மாடித்தோட்டம் அமைக்க மானியம்! ஆட்சியர் அறிவிப்பு!
தமிழக நீர்ப்பாசனத் திட்டம் மறுஆய்வு! உலக வங்கி அதிகாரிகள் வருகை!!
Share your comments