வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக நேற்றைய வானிலை ஆய்வு அறிக்கை தெரிவித்திருந்தது.
இதனை அடுத்து நேற்று தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று திடீரென பலத்த காற்றுடன் இரவு பெய்த தொடர் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல், வாலாஜாபாத், செங்கல்பட்டு, திருப்போரூர், ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
இன்றய நிலவரம் படி, நேற்றை விட இன்று மழையின் அளவு குறைவாகவே இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary: Rains in Tamil Nadu! Chennai and its Neighbouring districts saw modern shower
எங்களுக்கு ஆதரவளியுங்கள்!
அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.
உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....
Share your comments