1. செய்திகள்

25 தலைமுறைகளை கண்ட ராமேஸ்வரம் பொந்தன்புளி மரத்தை பாதுகாக்க கோரிக்கை

KJ Staff
KJ Staff
baobab tree
Baobab tree

ராமேஸ்வரத்தில் 700 ஆண்டு கால பழமையான பொந்தன்புளி மரத்தை பாதுகாக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

25 தலைமுறைகளை கண்ட, வறட்சியை நன்கு எதிர்கொண்டு தாங்கி வளர்ந்த வரலாற்று சிறப்பு மிக்க பொந்தம்புளி மரம் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் உள்ளது. தற்போது இந்த மரத்தின் அழிவைத்த தடுக்கவும் தொடர்ந்து புதியதாக இம்மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொந்தன்புளி மரத்தை பற்றிய கணக்கெடுப்பில் தனி தனியாக ராமேஸ்வரம், பாம்பன், ராமநாதபுரம், தேவிபட்டினம், பனைக்குளம், ராஜபாளையம், மதுரை அமெரிக்க கல்லூரி உள்ளிட்ட இடஙக்ளில் 20 வதிற்கும் குறைவாக இந்த பொந்தன்புளி மரங்கள் காணப்பட்டுள்ளன. மேலும் பல ஊர்களில் இந்த பொந்தன்புளி மரங்கள் சுத்தமாக அழிந்து விட்டடது எனவும் சமூக ஆர்வலர் இயற்கை கண்.இளங்கோ கூறினார்.

ராமேஸ்வரத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் வரையிலும் பல்வேறு இடங்கலிகள் இந்த பொந்தன்புளி மரங்கள் இருந்தன. ஆனால் மக்களின் அறியாமையால் இந்த பெரும்பான்மையான மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.

rameswaram ponthanpuli

வரலாறு

வரலாற்று சிறப்பு மிக்க இந்த பொந்தன்புளி மரத்தின் பிறப்பிடம் ஆப்ரிக்கா, அரேபியா தீபகற்பம் மற்றும் மடகாஸ்கர் ஆகும். பொந்தம்புளி மரத்தில் எட்டு இனங்கள் உள்ளன. அதில் ஆறு இனங்கள் மடகாஸ்கருக்கும், ஒன்று ஆப்ரிக்காவிற்கும், மட்டொன்று அரேபியா தீபகற்பத்திற்கும் சொந்தமானது.

பாண்டிய மன்னர்கள் அரேபியா தீபகற்பத்தில் இருந்து குதிரைகளை இறக்குமதி செய்து அக்குதிரைகளை போர் பயிற்சிக்கு வழங்குவதற்காக, வாணிபத்திற்காக வந்த அரேபியர்களை நியமித்து அவர்களை குதிரைப்படை தலைவர்களாக நியமித்தனர்.

பொந்தன்புளி மரங்களின் இலைகள், கனிகள், காய்கள் ஆகியவை இக்குதிரைகளின் தீவனமாகும். இதற்காக அரேபியா தீபகற்பகத்தில் இருந்து பொந்தன்புளி மரத்தின் விதைகளை கொண்டு வந்து பாண்டிய நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடப்பட்டு வளர்க்கப்பட்டன.

இம்மரங்கள் சாதாரணமாக 1500 ஆண்டுகளுக்கும் மேல் உயிர் வாழ்பவை. ராமேஸ்வரம் கடற்கரையில் குதிரைகளை ஏற்றி வந்த மரக்கல கப்பலையும், அதில் குதிரைகளோடு அரபு வணிகர்கள் நிற்கும் காட்சி இன்று 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருநெல்வேலி மாவட்டம் திருப்புடையார், கோவில் கோபுரத்தில் வரையப்பட்டுள்ள ஓவியம் ஒன்றில்  காணக்கிடைக்கும்.  

K.Sakthipriya
Krishi Jagran

English Summary: Rameswaram Requesting to Save 700 years old Baobab Tree (ponthanpuli) which has seen 25 generation Published on: 11 September 2019, 02:22 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.