1. செய்திகள்

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த தோட்டக்கலைத்துறை முடிவு: தமிழகம் முழுவதும் இலவச விதைகள் விநியோகம்

KJ Staff
KJ Staff
TN State Tree

தமிழகத்தில் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், மண் அரிப்பை தடுக்கவும் அரசு தோட்டக்கலைத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் 2 கோடி பனை மரம் விதைகளை இலவசமாக விநியோக்க திட்டமிட்டுள்ளது.

பனை மரம் தமிழகத்தின் மாநில மரம். இதுதான் சிறப்பு என்னவென்றால் வறட்சியை தாங்கி வளரக்கூடியது. இதன் சல்லி வேர்கள் ஆழம் வரை சென்று நிலத்தடி நீரை சேமித்து வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. அதனால் தான் நம் முன்னோர்கள் நீர் நிலைகளின் அருகில் பனை மரங்களை நட்டு வைத்து நிலத்தடி நீரை சேமித்து வைத்தனர்.

ஒரு பனைமரம் என்பது முதல் 15 -  20ஆண்டுகளில் பலன் தர ஆரம்பிக்கும். குறைந்த பட்சம் 150 முதல் 200 ஆண்டுகள் வரை தொடர்ந்து பலன் தரக்கூடிய அரிய மரம். இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் ஒவ்வொன்றும் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது.

Palm Seed

தமிழகத்தை பொறுத்தவரை தென் மாவட்டங்களில் வறட்சி அதிகரித்து வருகிறது. அதனால் தமிழக அரசு மாவட்டங்கள் தோறும் ஏரி, குளங்கள், கண்மாய்கள் ஆகிய அனைத்து நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு குடிமராமத்துதிட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது. அடுத்த கட்டமாக தூர்வாரப்பட்ட  குளங்கள், ஏரிகள்,  கண்மாய்களின் கரைகளில் இந்த பனை விதைகளை இலவசமாக பெற்று நடவு செய்து கரைகளை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க உள்ளது.

மதுரையில் வரும் செப்டம்பர் 22-ம் தேதி  ஒரு லட்சம் பனை விதைகளை பனை காக்கும் களப்பணியாளர்கள் விதைக்க முடிவு செய்துள்ளனர். இதற்கு உறுதுணையாக அரசும் பனை மரங்களை காக்க களம் இறங்கியுள்ளது என்பது குறிப்பிட தக்கது.

Students Collecting Palm seeds

மாநிலம் முழுவதும் 2 கோடி பனைமரம் விதைகளை இலவசமாக வழங்க தோட்டக்கலைத்துறை முன் வந்துள்ளது.  இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 64 தோட்டக்கலைப் பன்னைகளிலும் பனை மரம் விதைகள் உற்பத்தி செய்து தயார் நிலையில் உள்ளது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள தன்னார்வு தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் முன்வந்து செயல்பட வேண்டும் எனவும், இதனை பயன்படுத்தி கொள்ளவும் தோட்டக்கலைத்துறை இயக்குனர் கேட்டு கொண்டார்.

மதுரை மாவட்டத்தில் மேலூர் வட்டாரத்தில் உள்ள பூஞ்சுத்தி அரசு தோட்டக்கலை பண்னையில் பனை விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் தங்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம், என்றார். மேலும் மதுரை மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டு தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகள், தொண்டு நிறுவனங்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் விவசாய அமைப்புகள் மூலம்  இலவசமாக 4 லட்சம் பனை விதைகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Tamil Nadu Horticulture Department take an initiative improve groundwater level

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.