1. செய்திகள்

கிலோ 35 ஆக குறைந்த தக்காளியின் விலை: கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு

KJ Staff
KJ Staff
chennai-tomato

கடந்த மாதம் கோடை வெயிலின் அதிகரிப்பினாலும், மழை இன்மை காரணத்தினாலும் வரத்து குறைவால் கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் அளவு குறைந்திருந்த நிலையில், விலைகள் உயர்த்தப்பட்டு விற்கப்பட்டன.

தற்போது காய்கறிகளின் விற்பனையில் தக்காளியின் விலை மட்டும் குறைந்து கிலோ ரூ 35 ஆக விற்கப்படுகிறது. கிருஷ்ணகிரி, ஆந்திரா, கர்நாடக, ஓசூர் ஆகிய எல்லையோரப் பகுதிகளில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு தக்காளி அதிகளவில் வருகின்றன, இதனால் சந்தையில் தாக்காளியின் விற்பனை அதிகரித்துள்ளது.  

மேலும் மற்ற காய்கறிகளான பீன்ஸ் ரூ 60, அவரைக்காய் ரூ 50, வெங்காயம் ரூ 22, சாம்பார் வெங்காயம் ரூ 60, பச்சை மிளகாய் ரூ 45, வெண்டைக்காய், புடலங்காய் தலா ரூ 35, முட்டைகோஸ் ரூ 16, கத்திரிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி தலா ரூ 25, கேரட் ரூ 45, பாகற்காய் ரூ 40, உருளைக்கிழங்கு ரூ 16, பீட்ரூட் ரூ 35, என அதிகரித்தும், அதே விலையிலும் விற்கப்பட்டு வருகின்றது.

English Summary: rate of tomato has been low as 35kg: sales increased in chennai koyambedu market Published on: 01 July 2019, 01:55 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.