தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் மக்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு தாரர்களுக்கு இலவச வேஷ்டி சேலை வழங்க தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை (Pongal)
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 14 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் மக்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஏழை எளிய மக்களும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் அரசு சார்பில், பொங்கல் பரிசு பொருள்கள் வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை, எளியோர், ஆதரவற்றவர்கள், முதியோர், விதவைகளுக்கு ரேஷன் கடைகளில் தமிழக அரசு இலவச வேஷ்டி சேலைகளை ஆண்டுதோறும் வழங்கும். அந்த வகையில் இந்த ஆண்டு இலவச வேஷ்டி சேலைகள் உற்பத்திக்கு முதல் தவணையாக, 243.96 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே அரசு வெளியிட்ட உத்தரவின் படி அக்.1 ஆம் தேதி முதல் தொடங்கி டிச. 31 ஆம் தேதிக்குள் இந்த பணிகள் முடிவடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் ஈரோடு மாவட்டத்தில், 49 லட்சத்து, 46 ஆயிரத்து, 683 சேலைகள், திருச்செங்கோட்டில் 35.45 லட்சம், கோவையில் 9.30 லட்சம் என பல மாவட்டங்களில் வேஷ்டி, சேலை வழங்க ஆர்டர் வழங்கப்பட்டது. தற்போது நவம்பர் 1 ஆம் தேதி முதல் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது வரை 10 லட்சம் சேலைகள், 20 லட்சம் வேட்டிகள் வரை உற்பத்தியாகி இருக்கிறது.
இந்த வேஷ்டி சேலைகளின் தரம் பார்த்து அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற இருக்கிறது. மேலும் சென்ற ஆண்டு போல இல்லாமல் இந்த ஆண்டு ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ரூ. 1000 ரொக்க பரிசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்ற ஆண்டு வழங்கப்பட்ட 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பின் தரம் சற்று குறைவாக இருந்ததால் தமிழக அரசு ரொக்க பரிசு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க
ரேஷன் கடைகளில் மோசடி: கடும் நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசு!
மாதம் ரூ.64,000 பென்சன்: இந்த திட்டத்தில் பயன்பெறுவது எப்படி?
Share your comments