தீபாவளியை முன்னிட்டு நுகர்வோரின் வசதியைக் கருத்தில்கொண்டு, ரேஷன் கடைகளின் திறப்பு நேரத்தை அதிகரித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் பொருட்கள் (Ration items)
பொதுவாக பண்டிகைக் காலங்களில் சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை நுகர்வோரின் வசதிக்கு ஏற்ப வழங்கி உதவ வேண்டும் என உணவுப் பொருள் வழங்கல்துறை திட்டமிடுவது வழக்கம்.
இது தொடர்பாக தமிழக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உதவி ஆணையர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த 11-ந் தேதி உணவுத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் பயனடையும் வகையில் நவம்பர் மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசியப் பொருட்களைக் கடைகளுக்குக் கொண்டு வருவதை முழுமையாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
தீபாவளி (Deepavali)
மேலும், நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகை வருவதால், அம்மாதத்தின் 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் ரேஷன் கடைகள் காலை 8 மணியில் இருந்து மாலை 7 மணி வரைத் திறக்கப்பட வேண்டும் என்று அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, நவம்பர் மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசிய பொருட்களின் அதிகபட்சமான முன்நகர்வு முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்படுகிறது.
காலை 8 முதல் மாலை 7 மணி வரை (8 a.m. to 7 p.m.)
மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் ரேஷன் கடைகள் காலை 8 மணியில் இருந்து மாலை 7 மணி வரை திறக்கப்பட்டு, அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments