தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வந்தாலும், அதனை எதிர்கொள்ள அரசிடம் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதி அளித்துள்ளார்.
கொரோனா 2-வது அலை (Corona 2nd wave)
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தொற்று அதிகமாக இருந்த நிலையில் புதிதாகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் அதிரடி நடவடிக்கைகளால், தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 35 ஆயிரத்தைக் கடந்த தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாக 7 ஆயிரம் வரைக் குறைந்துள்ளது.
இந்த நிலையில், புதிய சட்டசபையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்று வருகிறது.
விஜயபாஸ்கர் கருத்து (Vijayabaskar comment)
இந்தக் கூட்டத் தொடரின், 2 வது நாளான இன்று பேசிய அதிமுக எம்.எல்.ஏ. விஜயபாஸ்கர், ஆளுநர் உரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதை முக்கியமாக பார்க்கிறேன்.
அதிமுக எதிரிக்கட்சியாக இல்லாமல், எதிர்க்கட்சியாக செயல்படும். பொது போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில் அரசு இன்னும் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
முதல்வரின் நடவடிக்கை (The action of the CM)
தமிழ்நாட்டில் கொரோனாத் தொற்று தொடர்ந்து குறைந்து வருவதற்கு முதலமைச்சரின் நடவடிக்கையே காரணம். கொரோனா தடுப்பூசி முழுமையாக போடப்பட்ட மாநிலமாகத் தமிழ்நாடு மாறும்.
7 லட்சம் தடுப்பூசிகள் (7 lakh vaccines)
தடுப்பூசி போடுவதை தமிழ்நாடு அரசு, மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பு இருந்தால் நாளொன்றுக்கு 7 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இயலும்.
3-வது அலைக்கு தயார் (Ready for the 3rd wave)
எனவே 3-வது அலை வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தமிழக அரசுத் தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசக் கொரோனாத் தடுப்பூசி - தமிழக அரசு!
கொரோனா தடுப்பூசி விநியோகிக்க டிரோன் பயன்பாடு! ஆய்வு செய்ய அரசு அனுமதி!
தமிழகத்திற்கு 4 இலட்சம் கொரோனா தடுப்பூசி வருகை! சுகாதாரத் துறைத் தகவல்!
Share your comments