1. செய்திகள்

50,000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு! குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரிப்பு!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

கொரோனா நோய் பரவல் உலகை உலுக்கி வரும் நிலையில், இந்தியாவில் 91 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 50,000க்கு கீழ் குறைந்தது. குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கொரோனா 2வது அலை

முதல் அலையில் எளிதாக தப்பித்த இந்தியா, கொரோனா வைரசின் 2ம் அலை கடுமையான பாதிப்பில் சிக்கியது. அதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது வைரஸ் பரவல் வெகுவாக குறைந்துள்ளது. குணமடைவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது. பாதிப்பு குறைந்ததையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டு மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்புகின்றன.

கொரோனா பாதிப்பு நிலவரம்

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,99,77,861 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா இறப்பு விவரம்

நாடு முழுவதும் ஒரே நாளில் 1,167 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,89,302 ஆக உயர்ந்துள்ளது.

 

குணமடைபவர்களிண் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 81,839 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,89,26,038 ஆக உயர்ந்துள்ளது. இன்னுமும், நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,62,521 பேர் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 28,87,6600201 பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

விண்ணப்பித்த 15 நாளில் புதிய ரே‌ஷன் கார்டு - ஆளுநர் உரையில் தகவல்!!

English Summary: Corona cases come down to 50,000 in india, recovering number increases day by day

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.