மின்வாரியத்திற்கு கடன் வழங்க வங்கிகள் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால், மின் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் மின் கட்டணம் உயர்த்தப்படும் எனத் தெரிகிறது.
தமிழக மின் வாரியத்திற்கு, மின் கட்டணம் வாயிலாக, 2020 - 2021ல், 63 ஆயிரத்து, 388 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. ஆனால் பல ஆண்டுகளாக மின் வாரியம் ஆண்டுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை சந்தித்து வருவதால் கடன், 1.50 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
மின் கட்டண நிர்ணய மனு
எனவே, புதிய மின் திட்டங்கள், நடைமுறை மூலதனம் போன்ற செலவுகளை சமாளிக்க ஏதுவாக, மத்திய அரசின், 'பவர் பைனான்ஸ், ரூரல் எலக்ட்ரிபிகேஷன்' நிறுவனங்கள், தேசிய மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் மின் வாரியம் கடன் வாங்குகிறது.இதற்காக, மின் வாரியம், தன் மொத்த வருவாய் தேவை மற்றும் மின் கட்டண நிர்ணய மனுவை, ஆண்டுதோறும் நவம்பர் மாதம், ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
உயர்த்த விருப்பமில்லை
ஆனால் மின் கட்டண நிர்ணய மனுவை, ஆணையத்திடம் மின் வாரியம் சர்ப்பிக்காத நிலையில், 2014ல் ஆணையமே தன் அதிகாரத்தை பயன்படுத்தி, மின் கட்டணத்தை உயர்த்தியது. மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் இருந்த போதிலும், தன் வருவாய்க்கு ஆதாரமாக உள்ள மின் கட்டண உயர்வுக்கான மனுவை சரிவர சமர்ப்பிப்பதில்லை.
ரூ.3,000 கோடி கடன்
இந்நிலையில், தற்போது, நடைமுறை மூலதன செலவுகளுக்காக தேசிய வங்கிகளிடம், மின் வாரியம், 3,000 கோடி ரூபாய் கடன் கேட்டுள்ளது.ஆனால், நிதி நெருக்கடியை காரணம் காட்டி, கடன் வழங்க தயக்கம் காட்டிய வங்கிகள், மின் கட்டணத்தை மாற்றி அமைக்காத வரை கடன் வழங்க முடியாது என கை விரித்து விட்டன.
இந்த தகவலை மின் வாரியம், தமிழக அரசிடம் தெரிவித்துள்ளது. எனவே, நிதி நெருக்கடியை சமாளிக்கவும், புதிய கடன் பெறவும், மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான ஆலோசனை துவங்கி உள்ளது. அவ்வாறு மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், அது பயனாளிகளுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க...
சூரிய சக்தி பம்ப் செட் பராமரிப்பு மையம் அமைக்க ரூ.4 லட்சம் மானியம்!
பொருளாதாரத்திற்கு இயற்கை விவசாயமும் அடிப்படை - பிரதமர் மோடி!
Share your comments