1. செய்திகள்

வெங்காய இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்வு!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

சந்தைகளில் வெங்காய விலை உயர்ந்து வருவது குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்ததைத் தொடர்ந்து, அதிகரித்துவரும் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக வெங்காய இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த அரசு முடிவெடுத்துள்ளது.

2021 ஜனவரி 31 வரை வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு, இரசாயனப் புகை கொண்டு தூய்மையாக்குதல் மற்றும் தாவர நலச் சான்றிதழ் ஆகிய விதிகளில் இருந்து விலக்களிக்க வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை முடிவெடுத்துள்ளது.

மேற்கண்ட தளர்வுகள் சில நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இரசாயனப் புகை கொண்டு தூய்மையாக்கப் படாமல் இந்தியா வந்தடையும் வெங்காயச் சரக்குகள், பதிவு பெற்ற நிறுவனத்தின் மூலம் இறக்குமதியாளரால் இங்கேயே தூய்மைப் படுத்தப்படும்.

வேளாண் பயன்பாட்டிற்கு எந்திரங்களை இனி விவசாயிகள் வாடகைக்கு எடுக்கலாம்! வேளாண்மை பொறியியல் துறை அறிவிப்பு

தொடர்புடைய அதிகாரிகளால் பின்னர் இவை பரிசோதனை செய்யப்பட்டு, பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் எதுவும் இல்லை என்றால் மட்டுமே சந்தைகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படும். அவ்வாறு இல்லாத பட்சத்தில், சரக்குகள் நிராகரிக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்படும். மேலும், இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயங்கள் நுகர்வுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற உறுதிமொழியும் இறக்குமதியாளர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்படும்.

மேலும் படிக்க

சொட்டுநீர் பாசன குழி அமைக்க விவசாயிகளுக்கு மானியம் - விண்ணப்பிக்க அழைப்பு!!

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3,500 கோடி நிதியுதவி - அமைச்சரவை ஒப்புதல்!!

English Summary: Relaxation on conditions of import of onions into India to counter high market prices Published on: 18 December 2020, 02:47 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.