1. செய்திகள்

MSP- யை விட கூடுதல் விலைக்கு அரிசி கொள்முதல் - ரிலையன்ஸ் ஒப்பந்தம் !!

Daisy Rose Mary
Daisy Rose Mary

விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்தியில், அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையை (MSP)விட கூடுதல் விலைக்கு 1,000 குவிண்டால் சோனா மசூரி ரக நெல்லை கொள்முதல் செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர்.

கர்நாடக விவசாயிகளுடன் ஒப்பந்தம்

இந்நிலையில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக ரிலையன்ஸ் நிறுவனம் கூடுதல் விலைக்கு நெல்லை கொள்முதல் செய்ய தீர்மானித்துள்ளது. கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள சிந்தனூர் தாலுகாவில் உள்ள விவசாயிகள் கூட்டமைப்புடன் இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்குள்ள ஸ்வஸ்திய விவசாயிகள் உற்பத்தி நிறுவனத்துடன் (SFPC)ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகவர்கள் ஒப்பந்தம்செய்துள்ளனர். 16%க்கும் குறைவான ஈரப்பதம் உள்ளதாக நெல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை மட்டும் விதிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விலைக்கு கொள்முதல்

நெல், ஒரு குவிண்டால் ரூ.1,950 விலையில் கொள்முதல் செய்யப்படுவதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்துள்ள விலையானது குவிண்டால் ரூ.1,868 ஆகும். தற்போது குவிண்டாலுக்கு ரூ.82 கூடுதல் விலையில் வாங்க ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

SFPC கூட்டமைப்பு ரூ.100 பரிவர்த்தனைக்கு 1.5 சதவீதம் கமிஷன் பெறும். நெல்லை மூட்டையாகக் கட்டி கிடங்கில் கொண்டு சேர்ப்பது வரை விவசாயிகள் பொறுப்பாகும். இதற்கு ஆகும் பேக்கிங் மற்றும் போக்குவரத்து செலவை விவசாயிகளே ஏற்க வேண்டும். விவசாயிகள் சிந்தனூரில் உள்ள கிடங்குக்கு நெல் மூட்டைகளை கொண்டு சேர்க்க வேண்டும்.

 

ஆய்வுக்குப் பின் பணம்

கிடங்கில் உள்ள நெல்லை மூன்றாம் தரப்பு பிரதிநிதிகள் பரிசோதித்து அது ரிலையன்ஸ் வகுத்துள்ள நிபந்தனைக்கு உள்பட்டதாயிருப்பின் அது ஏற்கப்படும். அவர்கள் அளிக்கும் பரிந்துரைக்குப் பிறகே நெல்லுக்குரிய பணம் SFPCக்கு ஆன்லைன் மூலம் வரும்.அதை விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைப்போம் என்று எஸ்எப்பிசி அமைப்பின் நிர்வாக இயக்குநர் மல்லிகார்ஜுன் தெரிவித்துள்ளார்.

முறைகேட்டை தடுக்க GPS

கிடங்குக்கு அனுப்பப்படும் நெல், வழியில் மாற்றுவது போன்ற தில்லுமுல்லுகளைத் தடுக்கும் வகையில் வாகனங் கள் ஜிபிஎஸ் மூலம் கண் காணிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்

மேலும் படிக்க..

47-வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம் - உச்சநீதிமன்றம் இன்று விசாரணை!!

3,000 டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் செய்ய மின்வாரியம் முடிவு! 60,000 விவசாயிகள் பயனடைவார்கள்!

அரசு கல்லூரி மாணவர்களுக்கு 4 மாதங்களுக்கு 2 ஜிபி இலவச டேட்டா : முதல்வர் அறிவிப்பு!!

English Summary: Reliance to procure rice from karnataka farmers higher than the rate of Msp Published on: 11 January 2021, 11:28 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.