சென்னையின் பிரதான சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், 'ரிமோட் சிக்னல்'களை அமைக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. அதன் படி, தற்போது சோதனை அடிப்படையில், 11 இடங்களில் 'ரிமோட் சிக்னல்'கள் நிறுவப்பட்டுள்ள நிலையில், அதை, 302 இடங்களுக்கு விரிவுபடுத்த, போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னையில் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையிலால், பிரதான சாலைகளில் தினசரி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ரிமோட் சிக்னல் (Remote Signal)
போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண, மாநகரின் முக்கிய பகுதிகளில் மேம்பால சாலை அமைக்க மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. அதே சமயம், அண்ணா சாலை, காமராஜர் சாலை, காந்தி இர்வின் சாலை, ஈ.வெ.ரா., சாலை உள்ளிட்ட வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளில், போக்குவரத்து நெரிசலை குறைக்க, காவல்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நான்கு மாதத்திற்கு முன் காமராஜர் சாலை, அண்ணாசாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில், 'ரிமோட்' வாயிலாக இயக்ககூடிய சிக்னல்கள் அமைக்கப்பட்டன.
சோதனை ஓட்டமாக, 11 இடங்களில் இத்தகைய சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டன. இந்த கம்பங்களில் உள்ள சிக்னலில், எந்த விளக்கு எரிகிறதோ, அதே வண்ணம் சிக்னல் கம்பம் முழுவதும் எரிந்து ஒளிரும்.பழைய சிக்லன் இயக்க முறையில், சிக்னல் பராமரிப்பை மேற்கொள்ளும்.
ஒப்பந்த நிறுவனத்தின் உதவியின்றி, சிக்னலுக்கான நேர இடைவெ ளியை, போக்குவரத்து போலீசாரால் மாற்றியமைக்க முடியாது. ஆனால், தற்போதைய புதிய ரிமோட் முறையின் படி, வாகன நெரிசலுக்கு ஏற்பட, போக்குவரத்து போலீசாரே ரிமோட் வாயிலாக நேரடியாக, சிக்னலை மாற்ற முடியும். இதன் வாயிலாக, எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறதோ, அங்கு தேவைக்கேற்ப சிக்னல்களை இயக்கி, நெரிசலை குறைக்க முடியும்.
அதே போல், நெரிசலே இல்லாத சாலைகளில், வாகன ஓட்டிகளில், கடும் வெயிலில் காத்திருந்து நேரத்தை வீணடிப்பது தவிர்க்கப்படும். காவல்துறையின் இந்த நடவடிக்கை, வாகன ஓட்டிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, 302 சிக்னல்களும், ரிமோட் வாயிலாக இயங்கும் படி மாற்றியமைக்க காவல்துறை உயர் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
302 சிக்னல்களில் அமல்
போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் சோதனையோட்டமாக அமைக்கப்பட்ட, ரிமோட் வாயிலாக இயங்ககூடிய சிக்னல்கள், வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், போக்குவரத்து போலீசாருக்கும், ரிமோட் வாயிலாக சிக்னல்களை மாற்றுவது எளிதாக உள்ளது.
தொடர்ந்து, சென்னையில் உள்ள 302 சிக்னல்களையும், ரிமோட் வாயிலாக மாற்ற முடிவு செய்துள்ளோம். ஒரு ரிமோட் சிக்னல் அமைக்க, ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவாகும். இதற்காக, தேவையான நிதியை திரட்டவும், ஒதுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் படிக்க
Share your comments