தமிழகத்தில் 18 ரெயில் நிலையங்கள் உள்பட நாடு முழுவதும் 508 ரெயில் நிலையங்களை ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் சீரமைக்கும் பணியை பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
'அமுத பாரத் நிலைய திட்டம்'
'அமுத பாரத் நிலைய திட்டம்' நாடு முழுவதும் 1,309 ரெயில் நிலையங்களை மறுசீரமைக்க கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
அதன் பகுதியாக, மத்திய அரசு 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 508 ரெயில் நிலையங்களை மறுசீரமைக்க முடிவு செய்துள்ளது.
அடிக்கல் நாட்டினார் பிரதமர்
இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று அடிக்கல் நாட்டி வைத்தார். ரூ.24 ஆயிரத்து 470 கோடி செலவில் இந்த ரெயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்படும்.
நேற்று நடந்த இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று தொடங்கி வைத்தார். ரூ.24 ஆயிரத்து 470 கோடி செலவில் இந்த ரெயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் சீரமைக்கப்படும் ரெயில் நிலையங்கள்
தமிழ்நாட்டில் அரக்கோணம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, கும்மிடிப்பூண்டி, ஜோலார்பேட்டை, கரூர், மயிலாடுதுறை, நாகர்கோவில், பெரம்பூர், போத்தனூர், சேலம், தென்காசி, தஞ்சை, திருப்பூர், திருத்தணி, திருவள்ளூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 18 ரெயில் நிலையங்கள் ரூ.381 கோடி மதிப்பில் மறுசீரமைக்க படவுள்ளது.
புதுச்சேரி ரெயில் நிலையமும் இதில் அடங்கும். புதுச்சேரி ரெயில் நிலைய மறுசீரமைப்புக்கு மட்டும் ரூ.93 கோடி செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களில் மறுசீரமைக்கப்படும் ரயில் நிலையங்களின் எண்ணிக்கை
உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான்- 55 ரெயில் நிலையங்கள், பீகார்-49, மராட்டியம்-44, மேற்கு வங்காளம்-37, மத்தியபிரதேசம்-34, அசாம்-32, ஒடிசா-25, பஞ்சாப்-22, குஜராத், தெலுங்கானா-தலா 21, ஜார்கண்ட்-20, ஆந்திரா-18, அரியானா-15, கர்நாடகா-13 என 508 ரெயில் நிலையங்கள் நாடுமுழுவதும் மறுசீரமைக்கப்படுகின்றன.
வசதிகள்
இந்த நிலையங்களில், உலக தரத்துக்கு பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படுவதாகவும். ரெயில் நிலைய கட்டிடம், அந்தந்த ஊரின் கலாசாரத்தை பிரதிபலிக்கும்வகையில் வடிவமைக்கப்படுவதாகவும். தங்கும் அறைகள், நடைமேடை, பெயர் பலகைகள், நடமாடும் படிக்கட்டு, மின்தூக்கி, பன்னடுக்கு வாகன நிறுத்தம், காத்திருப்பு வசதி மாற்றுத்திறனாளி வசதிகள், போக்குவரத்து வசதி உள்ளிட்ட வசதிகள் உருவாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் தெரிவித்ததாவது,
அடிக்கல் நாட்டிய பின் பேசிய பிரதமர் மோடி, வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றும் அமுத காலத்தின் தொடக்கத்தில் இந்தியா இருக்கிறது. இந்த உணர்வுடன் இந்திய ரெயில்வேயில் புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது. 508 ரெயில் நிலையங்கள் மறுசீரமைப்பு, ரெயில்வே உள்கட்டமைப்பில் புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கும். ரெயில்வேக்கானபட்ஜெட் ஒதுக்கீடு, கடந்த9 ஆண்டுகளில் 5 மடங்கு அதிகரித்துள்ளது.என்று அவர் கூறியுள்ளார்.
சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற திட்ட தொடக்க விழாவில் எம்.பி.க்கள் கிரிராஜன், கலாநிதி வீராசாமி, தமிழக பா.ஜ.க. துணை தலைவர் கரு.நாகராஜன், தெற்கு ரெயில்வே சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈரய்யா ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
இறுதி அஸ்திரமும் போச்சு- அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு
Share your comments