மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டதற்கு ஐ.நா., மனித உரிமை ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை (3 Agricultural Bills) வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். சட்டம் வாபஸ் பெறப்படுவதால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு வீடுகளுக்கு திரும்பும்படி, மோடிகேட்டுக் கொண்டார்.
ஐ.நா. அறிக்கை (UN Report)
ஐ.நா., மனித உரிமை ஆணையத்தின் உணவு பாதுகாப்பு உரிமைப் பிரிவின் சிறப்பு செய்தியாளர் மைக்கேல் பக்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் சட்டங்களை இயற்றுவதற்கு முன் நீண்ட ஆலோசனைகளும், விவாதங்களும் நடந்திருப்பது வரவேற்கத்தக்கது.
எனினும் இந்த சட்டங்களால் ஒட்டுமொத்த உணவுத் துறையின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுமோ என்ற அச்சம் விவசாயிகளிடம் ஏற்பட்டது. அதனால் அதிருப்தி அடைந்த அவர்கள் போராட்டத்தில் இறங்கியதால் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்கிறேன்.
சீர்திருத்தங்கள்
உணவு பாதுகாப்பு உரிமை உட்பட பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாசார உரிமைகளுக்கு மதிப்பளித்து வேளாண் துறையில் எத்தகைய சீர்திருத்தங்கள் செய்யலாம் என்பதை இந்தியா பரிசீலிக்க வேண்டும். இனி வேளாண் துறையில் மேற்கொள்ள உள்ள சீர்திருத்தங்கள், மனித உரிமை ஆணையம், விவசாயிகள், விவசாய சங்கங்கள் ஆகியவற்றுடன் கலந்தாலோசிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என நம்புகிறேன்.
மேலும் படிக்க
வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
விவசாய சட்டத்தை ரத்து செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!
Share your comments