நம் நாட்டின் 73வது குடியரசு தினத்தை (Republic day) முன்னிட்டு, சென்னை மெரினாவில் கவர்னர் ரவி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்தியாவின் 73வது குடியரசு தினம் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் கவர்னர் ரவி மரியாதை செலுத்தினார்.
தேசியக் கொடியேற்றம் (Hoists The National Flag)
மெரினா கடற்கரைக்கு வந்த கவர்னர் ரவியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். பின்னர், தேசியக்கொடியை ஏற்றி வைத்து கவர்னர் மரியாதை செலுத்தினார். அப்போது, ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டன. முப்படை வீரர்கள், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் கவர்னர் ஏற்று கொண்டார்.
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை கவர்னர், முதல்வர் பார்வையிட்டனர். அதில், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார் சிலை, வ.உ.சி., வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகுமுத்து கோன், ராஜாஜி, ஈ.வே.ராமசாமி, காமராஜர் சிலைகள் இடம்பெற்றன. அரசு இசைக்கல்லூரி மாணவ மாணவிகளின் இசை நிகழ்ச்சியுடன் அலங்கார ஊர்தி இடம்பெற்றது. 30 நிமிடங்களில் குடியரசு தின விழா நிறைவு பெற்றது.
பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு (Public not allowed)
கோவிட் பரவல் காரணமாக குடியரசு தின விழாவில் பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. வீர தீர செயல்களை புரிந்தவர்ளுக்கான விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், குடியரசு தினத்தை முன்னிட்டு, மாவட்ட கலெக்டர்கள் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.
மேலும் படிக்க
தேசிய பெண் குழந்தைகள் தினம்: பெண் குழந்தைகளை பாதுகாப்போம்!
முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!
Share your comments