திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து ரேஷன் பொருட்கள் குறித்து பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இதைத் தொடர்ந்து மற்றொரு அறிவிப்பை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டிருப்பது குறிப்பிடதக்கது.
தமிழகத்தில் 2.19 கோடிக்கும் மேற்பட்டவர்கள், ரேஷன் கார்டு பயனர்களாக உள்ளனர். இவற்றுக்கு கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் கீழ் செயல்படும் 35,296 ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில், திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து அடிக்கடி பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், நியாய விலைக் கடைகளில் கண் கருவிழி சரி பார்க்கும் முறை முன்னோட்டத் திட்டமாக செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி, புது அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், (Food Minister) உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றொரு புதிய அறிவிப்பை, தற்போது வெளியிட்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சக்கரபாணி;- அரிசி கடத்தலை தடுக்க அண்டை மாநில அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் இணைந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளதை குறிப்பிட்டார். பயோமெட்ரிக் முறையால் ரேசன் கடைகளில் தவறுகள் நடப்பது குறைந்துள்ளதையும், அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் படிக்க: கல்லணை ஆற்றில் நீர் திறப்பு: டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி!
மேலும் ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடந்தால், அதுகுறித்து 1967 என்ற எண்ணுக்கும், 1800 425 5901 என்ற எண்ணுக்கும் அழைத்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரேஷன் கடைகளில் விரைவில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவை பாக்கெட்டுகளில் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க:
போட்டித் தேர்வுகளில் கட்டாய தமிழ்த்தாள் இனி இவர்களுக்கு இல்லை: புதிய அறிவிப்பு!
Share your comments