1. செய்திகள்

நெல் திருவிழா 2019: நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் பெயரால் விருதுகள்

KJ Staff
KJ Staff

இந்த வருடத்தின்  நெல் திருவிழா திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியில் நடைபெற உள்ளதாக கிரியேட் அமைப்பின்  தலைவர் பி.துரைசிங்கம் அறிவித்துள்ளார்.

நெல் திருவிழா

நம்மாழ்வார் தொடங்கி வைத்த இந்த நெல் திருவிழாவை அவரது மறைவிற்கு பிறகு, மறைந்த நெல் ஜெயராமன் அவர்கள் நடத்தி வந்தார். இருவரும் இல்லாத சூழலில், 13வது ஆண்டாக இந்த வருடம் ஜூன் 8,9  தேதிகளில் தேசிய நெல் திருவிழா மற்றும் உணவுத் திருவிழாக்கள் நடை பெற உள்ளது.

சிறந்த இயற்கை விவசாயிகளுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் விருதுகள் வழங்கப்படும். இதில் கலந்துகொள்ளும் விவசாயிகளுக்கு "நமது நெல்லை காப்போம்" திட்டத்தின் கீழ் பயிரிட்டு பாதுகாக்கப்பட்டு வரும் 175 பாரம்பரிய நெல் ராகங்களில் இருந்து தலா 2 கிலோ வழங்கப்படும்.

விருந்தினர்கள்

இந்த திருவிழாவில் தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், வேளாண் துறை ஆணையர் ககன் தீப் பேடி, அந்தமான்  நிக்கோபார் தீவுகள் வேளாண் துறை செயலாளர் டி.மணிகண்டன், புதுச்சேரி மாநில வேளாண் துறை செயலாளர்  ஏ.அன்பரசன்,  மற்றும் அரசு அதிகாரிகள், விவசாய வல்லுநர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் இத்திருவிழாவை கண்டு, நெல் சாகுபடி குறித்து தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர். 

முகவரி

இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்புவோர்

தலைவர்

கிரியேட்

உழவர் சந்தை பின்புறம்

திருத்துறைபூண்டி  அஞ்சல்,

 திருவாரூர் மாவட்டம்

தொலைபேசி எண்கள்: , 04369 220954, 94433 81816, 99527 87998, 99761 41780

என்ற முகவரி மற்றும் தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.       

 

k.sakthipriya

krishi jagran 

English Summary: RICE FESTIVAL 2019: THIRUVARUR DUSTRICT, THIRUTHURAIPUNDI Published on: 03 June 2019, 01:29 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.