கொரோனா வைரஸ் நமக்கு பலவகைகளில் பொருளாதார நெருக்கடியைக் கொடுத்துள்ளது. அத்தகைய நெருக்கடியில் சிக்கியுள்ளவரா நீங்கள்?. குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் தரும் சிறுதொழில் தொடங்கலாம் வாங்க.
மாத சம்பளதாரராக இருக்கும் ஒருவருக்கு எப்போதாவது தொழில்முனைவோராக ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கும். இந்த ஆசையை நிறைவேற்ற குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம்.
அப்படியொரு சிறந்த சிறுதொழில்தான் Sweet Corn Business. திருமணங்கள், திருவிழாக்கள், மக்கள் கூடும் இடங்கள் போன்றவற்றில், Sweet Corn விற்பனை செய்வதைப் பார்த்திருப்போம். அதிலும் தென்றல் காற்றோடு மழை பெய்யும் மழை காலங்களில் இந்த சிறுதொழில் அதிகம் கைகொடுக்கும்.
முதலீடு (Investments)
இதற்கு அதிகபட்சம் 13 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை முதலீடு செய்ய வேண்டும். இந்த மிஷின்கள் ஆன்லைனிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை வாங்கி வைத்துக்கொண்டு, விற்பனையைத் தொடங்கலாம்.இந்த இயந்திரத்தை இயக்குவது எளிது என்பதால், பெரிய பயிற்சி பெறத் தேவையில்லை. எளிதில் கற்றுக்கொண்டு இயக்க ஆரம்பித்துவிடலாம்.
மூலப்பொருட்கள் (Ingredients)
Sweet Corn Businessஸிற்கு முக்கிய மூலதனம் சோளம்தான். ஒருகிலோ சோளம் அதிகபட்சம் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை மார்க்கெட்டில் இருந்து ஒட்டுமொத்தமாகக் கொள்முதல் செய்து கொள்ளலாம்.
ரூ.1 லட்சம் வரை லாபம் (Rs.1 lakh)
ஒரு கிலோ சோளத்தில் இருந்து, 8 முதல் 10 கப் Sweet Corn தயாரிக்கலாம். ஒரு கப் Sweet Cornனை, குறைந்தபட்சம் 20ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். இதன் மூலம் 120 ரூபாய் வரை லாபம் ஈட்ட முடிகிறது.
நாள் ஒன்றுக்கு 200 கப் விற்பனை செய்தால், குறைந்தபட்சம் மாதத்திற்கு ரூ1லட்சம் வரை லாபம் பெறலாம்.
சந்தை வாய்ப்பு
குறிப்பாக திருமணம், கோவில் நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு முன்கூட்டியே ஆர்டர் பெற்றுக்கொண்டால் போதும். இதைத்தவிர மிஷினை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச்செல்லலாம் என்பதால், மக்கள் கூடும் இடங்களுக்குக் கொண்டு சென்றும் விற்பனை செய்யலாம்.
Masala corn, Butter & Sweet corn, Pepper corn, Lemon corn போன்றவற்றின் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து, அதிக லாபம் ஈட்டுவதுடன், வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கவும் முடியும். Sweet Corn தயாரிப்பு மிஷினுடன், பாப்கார்ன் செய்யும் மிஷினையும் வாங்கிக் கொள்ளுங்கள். அப்போது இரட்டிப்பு லாபத்தை நம் வசமாக்கிக்கொள்ள முடியும்.
மேலும் படிக்க...
கேரட் உற்பத்தியை அதிகரிக்க புதிய முயற்சி-அரசு சார்பில் கேரட் கழுவும் இயந்திரம்!!
இயற்கை கழிவுகளை உரமாக்கும் நுண்ணுயிர் கூட்டுக் கலவை- TNAUவின் தயாரிப்பு!
Share your comments