1. செய்திகள்

ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் நாளை முதல் தொடக்கம்!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Mk Stalin With Sekarbabu

திருக்கோயில்களில் மொட்டை போடும் 1749 தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 5000  ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

மொட்டைக்கு கட்டணம் இல்லை  என்ற திட்டம் அமலுக்கு வந்த நிலையில் மொட்டை போடும் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழிபட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதையடுத்து,  திருக்கோயில்களில் மொட்டை போடும் தொழிலில் ஈடுபட்டு வரும் 1749 தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

அதன்படி இந்த திட்டத்தை நாளை காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள அனிதா பள்ளி வளாகத்தில் துவங்கி வைகிறார்.

இந்த திட்டத்தை தொடங்குவதற்கு அடையாளமாக 250 பேருக்கு மாத ஊக்கத்தொகை வழங்கப்படும். கொரோனா பரிசோதனை மேற்கொண்டு நெகட்டிவ் சான்றிதழ் உடன் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும்  கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ள ஊக்கத்தொகை அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் பொறுப்பாளரிடம் ரொக்கமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனாளிகள் ஆதார் அட்டையுடன் வர வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது. இதற்கான பொறுப்பு அலுவலர்களாக இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, உதவி ஆணையர்ஜோதி லட்சுமி, செயல் அலுவலர்கள் சீதாராமன் ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:

MK Stalin: இலங்கை தமிழர்களுக்கு இலவச அரிசி,எரிவாயு இணைப்பு!

மு.க. ஸ்டாலின்: ரூ.699.26 கோடியில் நலத்திட்ட உதவிகள்

English Summary: Rs. 5000 incentive scheme starts from tomorrow! Published on: 04 October 2021, 02:14 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.