கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலையில், தற்போது வீழ்ச்சி காணப்படுகிறது. குறிப்பாக, கடந்த 10 நாள்களில் தங்கம் விலை சவரனுக்கு கிட்டத்தட்ட ரூ.1,000 வரை சரிவை கண்டுள்ளது. இதனால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தனி கவுரவம்
பெண்களைப் பொருத்தவரை, தங்கத்தின் மீது எப்போதுமே ஈர்ப்பு இருக்கும். ஏனெனில் தங்கம்தான், சமூகத்தைப் பொருத்தவரை, தங்க ஆபரணங்களை அணிவதுதான், கவுரவமாகப் பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்ல, பங்கு சந்தை முதலீட்டாளர்களின் கவனமும், ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக, தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
இதன் எதிரொலியாக, கடந்த 10 நாட்களில், ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ஆயிரம் ரூபாய் வரை குறைந்திருக்கிறது.சென்னையில் இன்று ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4,805 விற்பனையாவதுடன், சவரன் ரூ.38,840400 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
சரியாக 10 தினங்களுக்கு முன்பு ஆபரணத் தங்கம் கிராம் 4,914 ரூபாயாக இருந்தது. எனவே இனிவரும் மாதங்கள் திருமண சீசன் என்பதால், திருமணம் வைத்திருப்பவர்கள், தங்கம் வாங்க இது சிறந்த தருணமாகவே உள்ளது.
மேலும் படிக்க...
Share your comments