தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூபாய் 1000 வழங்கும் நாள் வருகின்ற 20ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான பல நிபந்தனைகளை, தமிழ்நாடு அரசு வகுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. அது போலவே திட்டத்திற்கான பட்டியல் தயாரிக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
1000 ரூபாய்
குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்குவதற்கான நிபந்தனைகளை உருவாக்கி வரும் தமிழக அரசு, மாநிலத்தில் வருமான வரி தாக்கல் செய்யும் நபர்கள் குறித்த தகவல்களை மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் (CBDT) கேட்டுள்ளது.
யாருக்கு கிடைக்கும்
நிலையான மாத வருமானம் இன்றி அன்றாட கூலி வேலை செய்து உழைக்கும் பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கைம்பெண்கள், பி.எச்.எச் (PHH) , அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) ரேஷன் கார்டு வைத்திருக்கும் அட்டைத்தார்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இப்போது 1.14 கோடி அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டுகள் உள்ளன. தொடர்ந்து, முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்துள்ளவர்களின் விவரங்களும் ஒப்பீடு செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
யாருக்கு கிடைக்காது?
மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகையை வருமான வரி செலுத்துபவர்கள் பெற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அதே போல், மத்திய, மாநில அரசுப் பணியில் இருக்கும் பெண்களுக்கும் உரிமைத் தொகை கிடைக்காது. மேலும், நான்கு சக்கர சொகுசு வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது.
மேலும் படிக்க
இனி ஆதார் மட்டுமே போதும்: விரைவில் வரப் போகும் புதிய சேவை!
PPF திட்டத்தில் குறைந்த வட்டியில் கடன்: இதனை கவனத்தில் கொள்ளுங்கள்!
Share your comments