குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். திமுக வெற்று தேர்தல் வாக்குறுதிகளை அளிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில், இந்த அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், ஊக்கத்தொகை எப்போது வழங்கப்படும் எனவும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
திமுக வாக்குறுதி
தமிழகத்தில் நடைபெற்ற கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து இருந்தது. ஆனால் அந்த திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் திமுக வெற்று தேர்தல் வாக்குறுதிகளை அளிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.
அறிவிப்பு
இந்நிலையில் இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து தமிழகத்தில் விரைவில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறினார்.
இந்தத் திட்டம் நடப்பு ஆண்டு பட்ஜெட்டின் போது அறிவிக்கப்படும் என பெண்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த முக்கியத் திட்டங்கள் அடுத்தடுத்து அமல்படுத்தப் பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
Share your comments