தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
உதவித்தொகை (Scholarship)
தற்போது வேலை வாய்ப்பு என்பது மிகவும் அரிதான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் அரசானது வேலைவாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படும் இளைஞர்களுக்கு உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் படித்து முடித்துவிட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எந்த பயனும் இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு 200 முதல் 1000 வரை கல்வி தகுதிக்கேற்ப மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தமிழக அரசின் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பை பதிவு செய்து 5 ஆண்டு காலம் முடிவுற்று இருக்க வேண்டியது அவசியம். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை உண்டு.
அதன்படி இத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும் இந்த உதவித்தொகை பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் முடிவடைந்திருந்தலே போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தகுதியுடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேலும் படிக்க
மீண்டும் வரும் இரண்டு LIC பாலிசிகள்: பொதுமக்களுக்கு குட் நியூஸ்!
Share your comments