வேலை இல்லாதவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படுவதுடன், வேலைக் கிடைக்கும்வரை, இளைஞர்களுக்கு மாதம் ரூ.3000 வழங்கப்படும் எனவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதி (Election promise)
தேர்தல் நடைபெறும் போது மக்களின் வாக்குவங்கியைப் பெறுவதற்காக ஆட்சியில் உள்ளக் கட்சிகள் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம்.அந்த வகையில், அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் கோவாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு (Announcement by Arvind Kejriwal)
இதை முன்னிட்டு, தற்போது இருந்தே அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தீவிர தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், கோவா மாநிலத்தின் வேலைவாய்ப்பு தொடர்பாக ஏழு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
பனாஜியில் நடைபெற்றச் செய்தியாளர் சந்திப்பின் போது, ஆம் ஆத்மி கட்சி(Aam Aadmi Party) ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் ஊழலை ஒழித்து, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தரப்படும் என அதிரடியாக அறிவித்தார்.
யாராவது இங்கு (கோவா) அரசு வேலையில் சேர வேண்டும் என விரும்பினால், அவர்களுக்கு அமைச்சரின் ஆதரவு இருக்க வேண்டும் என இளைஞர்கள் என்னிடம் சொல்வார்கள். எம்எல்ஏ பரிந்துரை மற்றும் லஞ்சம் இல்லாமல் கோவாவில் அரசு வேலை பெறுவது சாத்தியமில்லை. இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம். கோவா இளைஞர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை அளிப்போம்.
ஒவ்வொரு குடும்பத்திலிருந்து வேலையில்லாத ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்படும் மற்றும் வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்" எனக் கூறினார்.
7 அதிரடி அறிவிப்புகள் (7 Action Announcements)
-
ஒவ்வொரு துறையிலும் அரசு வேலையில் சேர கோவா இளைஞர்களுக்கு உரிமை உண்டு.
-
கோவா மாநிலத்தின் ஒவ்வொரு குடும்பத்திலிருந்து வேலையில்லாத ஒரு இளைஞருக்கு அரசு வேலை கொடுக்க ஏற்பாடு செய்யப்படும்.
-
வேலைவாய்ப்பு இல்லாதா இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
-
80 சதவீத வேலைகள் கோவா இளைஞர்களுக்கே ஒதுக்கித் தரப்படும். தனியார் துறை வேலைவாய்ப்புகளிலும் இத்தகைய ஒரு சட்டம் கொண்டு வரப்படும்.
-
கொரோனா காரணமாக, கோவாவின் சுற்றுலாவில் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இத்தகைய சூழ்நிலையில், சுற்றுலாத்துறையைச் சார்ந்துள்ள மக்களுக்கான வேலைவாய்ப்பு மறுசீரமைப்பு செய்யும் வரை, அவர்களின் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபாய் வழங்கப்படும்.
-
சுரங்கத்துறையில் சார்ந்த குடும்பங்களுக்கும் அவர்களுக்கான வேலை மறுசீரமைப்பு செய்யும் வரை, மாதம் ஐயாயிரம் ரூபாய் வழங்கப்படும்.
-
மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க ஸ்கில் பல்கலைக்கழகம் (Skill University) திறக்கப்படும்.
மேலும் படிக்க...
தங்கச்சங்கிலியைத் தலை முடியாக மாற்றியப் பாடகர்!
வீட்டில் இருந்தே மாதம் ரூ.60,000 சம்பாதிக்கலாம்- SBI யின் அரிய வாய்ப்பு!
Share your comments