உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. அந்நாட்டின் முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா கொத்துக்குண்டுகளால் தாக்கி வருகிறது. இதில் இந்தியா தலையிட வேண்டும் எனவும், ரஷ்ய அதிபரிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என இந்தியாவிலுள்ள உக்ரைன் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ராணுவ நடவடிக்கை (Military action)
ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீது தாக்குதலை நடத்த உத்தரவிட்டுள்ள நிலையில், ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கியூ மற்றும் உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் தாக்குதல் துவங்கியது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பல உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து ரஷ்யா தரப்பில், ‛உக்ரைன் மக்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தவில்லை. உக்ரைன் மீது நடத்தப்படுவது போர் அல்ல; ராணுவ நடவடிக்கை' என விளக்கமளித்துள்ளது.
ரஷ்யா மேற்கொள்ளும் தாக்குதலை சமாளிக்க முடியாமல் உக்ரைன் படைகள் திணறி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கியூ விமான நிலையத்தை குறிவைத்து ரஷ்ய படைகள் குண்டுமழை பொழிகின்றன. ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க உக்ரைனில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகளில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
வேண்டுகோள் (Request)
ராணுவம் தனது வேலைகளை செய்து வருவதால் நாட்டு மக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றம் குறித்து இந்தியாவிலுள்ள உக்ரைன் தூதரகம் தரப்பில், இந்தியா தலையிட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தருணத்தில், இந்தியாவின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ஜனநாயக அரசுக்கு எதிராக சர்வாதிகார ஆட்சியின் ஆக்கிரமிப்பு ஏற்பட்டால், இந்தியா தனது உலகளாவிய பங்கை ஏற்க வேண்டும். எத்தனை உலக தலைவர்களின் பேச்சை புடின் கேட்பார் என்பது எனக்கு தெரியாது.
ஆனால், மோடியின் (Modi) நிலை, அவரது வலுவான குரல் ஆகியவற்றால், புடினை குறைந்தபட்சம் சிந்திக்க வைக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்திய அரசிடம் இருந்து சாதகமான அணுகுமுறையை எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.
மேலும் படிக்க
UKraine Crises: தமிழகத்தைச் சேர்ந்த 100 மாணவர்கள் உக்ரைனில் சிக்கித்தவிப்பு
உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கியதால் இந்தியாவை பாராட்டிய பில் கேட்ஸ்!
Share your comments