சுமார் 55 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அடுத்த அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிக்காக காத்திருக்கின்றனர். இதுமட்டுமல்லாமல், அடிப்படை சம்பளம் உயர்வு, 18 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத்தொகை பற்றிய தகவலும் வர இருக்கிறது.
அகவிலைப்படி (Allowance)
ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும் பணவீக்கம் தொடர்ந்து உயருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயருகிறது. இதை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுகிற்து. ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என அரையாண்டுக்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படும்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது 38% அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதற்கு முன் கடைசியாக தீபாவளிக்கு முன் அக்டோபர் மாதத்தில் அகவிலைப்படியை 38% ஆக உயர்த்தியது மத்திய அரசு. அதற்கு முன் மார்ச் மாதம் அகவிலைப்படி 34% ஆக உயர்த்தப்பட்டிருந்தது. அடுத்த அகவிலைப்படி உயர்வு எப்போது கிடைக்கும் என்பது மத்திய அரசு ஊழியர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், கடந்த கால அகவிலைப்படி உயர்வு நிலவரத்தை வைத்து பார்க்கும்போது, 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் அடுத்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி எவ்வளவு உயரும்?
7ஆம் ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலும், தற்போதைய பணவீக்கத்தை கணக்கில் கொண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி விகிதம் 3% முதல் 5% வரை உயர்த்தப்படும் என எஎதிர்பார்க்கப்படுகிறது இதுமட்டுமல்லாமல், கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாதம் அகவிலைப்படி உயர்வு தொகை வழங்கப்படவில்லை. எனவே, 18 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத்தொகை இன்னும் செலுத்தப்பட வேண்டி உள்ளது. இத்தொகை பற்றி புத்தாண்டு அல்லது அதன்பிறகு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடிப்படை சம்பளம் உயர்வு
இதுபோக மத்திய அரசு ஊழியர்கள் அடிப்படை சம்பளம் உயர்வுக்காகவும் காத்திருக்கின்றனர். இதற்கு fitment factor உயர்த்தப்படும். இதுகுறித்து அரசு ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிகிறது. 8ஆவது ஊதியக் குழு தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 7ஆம் ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படு வருகிறது.
இதையடுத்து 8ஆம் ஊதியக் குழுவை ஏற்படுத்துவது குறித்து அரசுக்கு அழுத்தம் தர அரசு ஊழியர் சங்கங்கள் தயாராகி வருகின்றன. எனினும், இதுகுறித்து அரசு எந்தவொரு அறிவிப்பும் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
பொங்கல் பரிசு: குடும்ப அட்டையுடன் வங்கி கணக்கை எப்படி இணைப்பது?
பென்சன் உயர்வு: பழைய ஓய்வூதிய திட்டம்: நிதியமைச்சரிடம் தொழிற்சங்கங்கள் கோரிக்கை!
Share your comments