மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு இனிமையான செய்தி வெளி வந்துள்ளது. அரசு ஊழியர்களின் சம்பளம் ரூபாய் 1,20,000 உயரப் போகிறது. இந்த மார்ச் மாதத்தில் இலட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு ஹோலிப் பரிசை வழங்க உள்ளது. இந்த முறை மார்ச் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.1,20,000 உயரப் போகிறது. அகவிலைப்படியை மத்திய அரசு 4 சதவீதம் உயர்த்தப் போகிறது.
அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்ட பிறகு, ஊழியர்களின் சம்பளத்தில் மிகப் பெரிய ஏற்றம் இருக்கும். இதனுடன், ஊழியர்களுக்கு 42 சதவீத அகவிலைப்படி பலன் கிடைக்கும். இந்த சலுகை 2023 ஜனவரி முதல் மட்டும் கிடைக்கும்.
ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மாதம் ரூ.30,000 எனில், அவருடைய சம்பளம் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1200 அதிகரிக்கும். அதன்படி, ஒரு ஆண்டில் மொத்த சம்பளத்தில் ரூபாய் 14,400 உயர்வு இருக்கும். மறுபுறம், ஊழியரின் அடிப்படை சம்பளம் மாதம் ரூபாய் 2.50 லட்சமாக இருந்தால், அவருடைய ஆண்டு சம்பளம் ரூபாய் 1,20,000 அதிகரிக்கும்.
அனைத்திந்திய நுகர்வோர் விலை குறியீடு (ஏஐசிபிஐ) மதிப்பீட்டின் படி, 2023 ஜனவரி 1 முதல், ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வின் பலனைப் பெறுவார்கள். இதுவரையில் அரசு ஊழியர்களுக்கு 38 சதவீத அகவிலைப்படி கிடைத்து வந்தது.
ஆனால் இப்போது அது 4 சதவீதமாக அதிகரித்துள்ளதால் இனிமேல், ஊழியர்களுக்கு அகவிலைப்படியின் பலன் 42% கிடைக்கும். ஜூலை மாதத்துக்கான அகவிலைப்படி 4% உயரலாம். டிஏ மற்றும் டிஆர் அதிகரிப்பால் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
மேலும் படிக்க
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000: யாருக்கெல்லாம் கிடைக்கும்! நிபந்தனைகள் என்னென்ன?
Share your comments