மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடிய விரைவில் சம்பளம் தொடர்பான ஒரு மகிழ்ச்சியான செய்தி அறிவிக்கப்படவுள்ளது. அதாவது மத்திய அரசு வரும் மார்ச் மாதத்தில் ஃபிட்மென்ட் பேக்டரில் சில திருத்தங்களை மேற்கொள்ளவிருக்கிறது. இந்த ஃபிட்மென்ட் பேக்டர் உயர்வுக்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000ல் இருந்து ரூ.26,000 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பள உயர்வு (Salary hike)
சில தகவல்களின்படி ஹோலி பண்டிகைக்கு பிறகு அதாவது மார்ச் 8ம் தேதிக்கு பிறகு மார்ச் மாதத்தில் ஃபிட்மென்ட் பேக்டர் மற்றும் அகவிலைப்படியை (டிஏ) அரசாங்கம் திருத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஃபிட்மென்ட் பேக்டர் 2.57 சதவீதமாக உள்ளது. 4200 கிரேடு பேயில் ஒருவர் ரூ.15,500 அடிப்படை ஊதியம் பெற்றால், அவருடைய மொத்த ஊதியம் ரூ.15,500×2.57 அல்லது ரூ.39,835 ஆக இருக்கும். 6வது சிபிசி பொருத்துதல் விகிதத்தை 1.86 என்று பரிந்துரை செய்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் அரசாங்கத்திடம் ஃபிட்மென்ட் பேக்டரை 3.68 ஆக உயர்த்துமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஊழியர்களின் கோரிக்கைப்படி, ஃபிட்மென்ட் பேக்டர் உயர்த்தப்பட்டால் அவர்கள் ஊதியம் ரூ.18,000லிருந்து ரூ.26,000 ஆக உயரும். 2023 ஆண்டு ஜனவரி 1 முதல் ஊழியர்களுக்கான அகவிலைப்படி 7வது ஊதியக் குழுவின் மூலம் உயர்த்தப்படும் என்று செய்திகள் முன்னர் வெளியானது. அகவிலைப்படி உயர்வு மட்டுமின்றி இதுவரை நிலுவையில் இருந்து வந்த 18 மாத நிலுவை அகவிலைப்படியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஒரு ஆண்டில் இருமுறை அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) திருத்தம் செய்யப்படுகிறது.
டிஏ மற்றும் டிஆர் திருத்தத்தின் மூலம் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்தனர். 7வது ஊதியக் குழுவின் கீழ், மார்ச் மாதத்தில் அரசு டிஏவை 3 சதவீதம் உயர்த்தி, ஊழியர்களுக்கான மொத்த டிஏ 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்ந்தது. மேலும் 7வது ஊதியக் குழுவின் கீழ் ஜனவரி மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைக் கொடுப்பனவு (ஹெச்ஆர்ஏ) விதிகளை புதுப்பித்துள்ளது.
மேலும் படிக்க
முதியோர்களுக்கு நிபந்தனையற்ற ஓய்வூதியம் வேண்டும்: செவி சாய்க்குமா தமிழக அரசு?
இவர்களுக்கு மட்டும் ரூ. 2500 உதவித்தொகை: மத்திய அரசின் சூப்பர் திட்டம் விரைவில்!
Share your comments