விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்க மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கலந்து கொண்டார். மேலும் ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவர் மொக்தியார் மஸ்தான், தணிக்கை குழு மாநில தலைவர், செயலாளர் மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிதிநிலை சீராகும்
மாநாட்டில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிப்படைத்தன்மை உடன் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார். கடந்த 10 ஆண்டுகளை போல் அல்லாமல் தற்போது நிதிநிலை சீரடைந்து வருகிறது. வரும் காலங்களில் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி தரப்படும்.
சம்பள உயர்வு (Salary hike)
முக்கியமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. தமிழகத்தின் நிதிநிலை சீரானதும் அனைவரது எண்ணமும் நிறைவேறும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார். இதன் தொடர்ச்சியாக அரசு ஊழியர்களுக்கு சம்பளமும் உயர்த்தப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
இந்த தகவல் அரசு ஊழியர்களுக்கு பெரிதும் நம்பிக்கையூட்டும் விஷயமாகவும், மகிழ்ச்சியூட்டும் விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக பலகட்ட போராட்டங்களை அரசு ஊழியர்கள் தொடர்ச்சியாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Share your comments