தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளின் வாயிலாக அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் கூடிய விரைவில் ஆவின் பொருட்களும் விற்பனை செய்ய இருப்பதாக அரசு திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரேஷன் கடை (Ration Shop)
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளின் வாயிலாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களையும் தாண்டி மக்களுக்கு உபயோகமாக இருக்கும் பல பொருட்களை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தில் மட்டுமே 7 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் ரேஷன் கடைகள் வாயிலாக பயனடைந்து வரும் நிலையில், இந்த பயன்பாட்டை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
ஆவின் பொருட்கள் (Aavin Products)
இந்நிலையில், கூட்டுறவு பண்டகச் சாலைகளில் வருமானத்தை பெருக்குவதற்காக தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பால், தயிர், நெய் போன்ற அனைத்து ஆவின் பொருட்களையும் விற்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று விழுப்புரம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் செய்தியாளர்களை சந்தித்து தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கூடிய விரைவில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் எனவும், கூட்டுறவுத் துறை சார்பில் புதிய ஆவின் மையங்கள் திறக்கப்பட இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு ஜாக்பாட்: அதிகரிக்கும் விடுமுறை நாட்கள்!
Share your comments