1. செய்திகள்

சம்பா சாகுபடிக்காக அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Samba Cultivation: Water opening from Amaravati Dam!

புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடதக்கது. ஷட்டர்கள் மூலம், 15 கன அடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 88.32 அடியாக இருந்ததும் குறிப்பிடதக்கது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, கடந்த 29 ஆகஸ்ட் 2022 அன்று காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,822 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 800 கன அடியிலிருந்து, 1,517 கன அடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால், கரூர் அருகே, பெரியாண்டாங் கோயில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 1,251 கன அடி தண்ணீர் மட்டும் வந்தது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஷட்டர்கள் மூலம், 15 கனஅடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 88.32 அடியாக இருந்தது.

திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சார்ந்த 10 அமராவதி பழைய வாய்க்கால்களின் (அலங்கியம் முதல் கரூர் வலது கரை வரை) பாசனப் பகுதிகளிலுள்ள நிலங்கலுக்கு அமராவதி ஆற்று மதகு வழியாக 5443.00 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் ஆக மொத்தம் 8104 மில்லியன் கன அடிக்கு மிகாமல், 25.09.2022 முதல் 07.02.2023 வரை 135 நாட்களுக்கு (70 நாட்கள் தண்ணீர் திறப்பு 65 நாட்கள் அடைப்பு) என்ற அடிப்படையில் சம்பா சாகுபடிக்காக அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசிதி பெறும் என அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், (நீர்வழளத் துறை) தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:

மத்திய அரசின் மோசடிக்கு விவசாயிகள் கண்டனம்

பயிர் காப்பீடு செய்ய மதுரை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

English Summary: Samba Cultivation: Water opening from Amaravati Dam! Published on: 24 September 2022, 05:09 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.