1. செய்திகள்

விவசாயிகள் போராட்டம்: மே 26ம் தேதி கருப்பு தினமாக அனுசரிப்பு!

Daisy Rose Mary
Daisy Rose Mary

வரும் மே 26ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் சங்கம் முடிவுசெய்துள்ளது. 

6 மாதங்கள் நிறைவு

மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் 2020, நவம்பர் மாதம் 26-ம் தேதி முதல் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தின, இருப்பினும் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க மறுப்பதால் விவசாயிகள் தங்களின் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

மே 26ம் தேதி கருப்பு தினம்

இந்நிலையில், விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் ஆறு மாதங்கள் நிறைவடைவதை முன்னிட்டு வரும் 26-ம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, விவசாய சங்கங்களின் தலைமை அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் தலைவர் பல்பீர் சிங் ரஜவல் கூறியுள்ளதாவது, வரும் 26-ம் தேதியுடன் எங்கள் போராட்டம் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவுபெறுகிறது. இதனை குறிக்கும் வகையிலும், பிரதமராக பதவியேற்று அன்றுடன் ஏழு ஆண்டுகள் முடிவடைவதையொட்டியும் வரும் மே 26-ம் தேதி, கருப்பு தினமாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

போராட்டம் தொடரும்

அன்றைய தினம் நாடு முழுதும் உள்ள மக்கள், தங்கள் வீடு, கடை, வாகனங்களில் கறுப்புக்கொடி ஏற்றி, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்ப பெறாத வரை எங்களது போராட்டம் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.

English Summary: Samyukta Kisan Morcha has decide to hold May 26 as Black Day Published on: 16 May 2021, 08:39 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.