பாரத ஸ்டேட் வங்கியில் ஜன்தன் கணக்கு திறந்து ரூபே (Rupay) கார்டு வாங்கினால் ரூ.2 லட்சம் வரை விபத்துக் காப்பீடு பெறலாம் என்று எஸ்.பி.ஐ., வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஜன்தன் யோஜனா திட்டம்
அனைதுத்து ஏழை மக்களையும் வங்கிச் சேவைக்குள் கொண்டுவரும் நோக்கில் 2014ம் ஆண்டு பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. இதில் ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு வசதி மற்றும் சலுகைகளோடு வழங்கப்படுகிறது. மேலும், மத்திய - மாநில அரசின் மானிய நிதியுதவிகள் இந்த ஜன்தன் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு வட்டி மானியத்துடனான கிஷான் கடன் அட்டைகளும் வழங்கப்படுகின்றன.
எஸ்.பி.ஐ வங்கியின் ரூபே அட்டை
இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி ஜன்தன் கணக்கு தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஜன்தன் திட்டத்தின் கீழ் உள்ள வாடிக்கையாளர்கள் ரூபே கார்டுக்கு விண்ணப்பித்து ரூ.2 லட்சம் வரையில் விபத்துக் காப்பீட்டு வசதியைப் பெறலாம் என அறிவித்துள்ளது.
SBI வங்கியில் ஜன்தன் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கியவர்களும், இனி கணக்கு தொடங்குபவர்களும் இச்சலுகையைப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சலுகையைப் பெறுவதற்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது, அது, ரூபே கார்டை (Rupay Card) 90 நாட்களுக்கு ஒருமுறையாவது பயன்படுத்தியிருக்க வேண்டியது அவசியம்.
வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயம்
ஜன்தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட அனைத்து வங்கிக் கணக்குகளையும் ஆதாருடன் இணைக்கும்படி வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கியுடனான ஆதார் இணைப்புக்கு மார்ச் 31ஆம் தேதி தான் கடைசி. அதேபோல், அனைத்து ஜன்தன் கணக்குகளிலும் பான் கார்டு இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க..
வங்கிகளை விட அதிக லாபம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்! - சின்ன சேமிப்பு அதிக லாபம்!
மாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்!
Share your comments