இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, SBI - ATM இனி உங்கள் வீடு தேடி வரும்.
வீடு தேடி வரும் ATM
கொரோனா காலத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், ஒரே இடத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தடுக்கவும் SBI- வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் வாட்ஸ்-அப் Whats app மூலமாகவோ ஒரு மெசேஜ் செய்தாலோ அல்லது போன் செய்தாலோ இந்த Mobile ATM உங்கள் வீடு தேடி வரும் என்ற அறிவிப்பை எஸ்பிஐ வங்கியின் தலைமை பொது மேலாளர் அஜய் குமார் அதிகாரப்பூர்வமாக தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
தற்போது முதற்கட்டமாக லக்னோவில் மட்டும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் வீட்டிற்கே ஏடிஎம் சேவைகள் விரைவில் கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகிறது.
Mobile-ATM சிறப்பம்சங்கள்
இந்த வீடு தேடி வரும் ATM- மூலம் பணப்பரிமாற்றம், பண விநியோகம், காசோலை எடுப்பது, காசோலை கோரிக்கை சீட்டு எடுப்பது, படிவம் 15H எடுப்பது, வரைவுகளை வழங்குவது, கால வைப்பு ஆலோசனைகளை வழங்குவது, ஆயுள் சான்றிதழ் எடுப்பது மற்றும் KYC ஆவணங்கள் எடுப்பது ஆகியவை வழங்கப்படுகிறது. இந்த வசதி தற்போது மூத்த குடிமக்களுக்கு, சிறப்பு திறன் கொண்டவர்களுக்கு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
SBI-வங்கி புதிய விதிமுறைகள்
SBI கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் ATM-களுக்கான விதிகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, மெட்ரோ நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் 8 முறை இலவசமாக ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம். இவர்கள் 5 முறை எஸ்பிஐ ஏடிஎம்களிலும், 3 முறை மற்ற ஏடிஎம்களிலும் பணத்தினை எடுத்துக் கொள்ளலாம்.
மெட்ரோ அல்லாத நகரங்களில் 10 முறை இலவசமாக பணத்தினை எடுத்துக் கொள்ளலாம். இதில் 5 முறை எஸ்பிஐ ஏடிஎம்களிலும், 5 முறை மற்ற ஏடிஎம்களிலும் பணத்தினை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும் படிக்க..
ரேஷன் கார்டு இல்லாமல் ரேஷன் பொருட்கள் வாங்குவது எப்படி? விபரம் உள்ளே!
மீன் வளர்போருக்கு மானியம் - விண்ணப்பிக்க அழைப்பு!!
தென்னந்தோப்பில் மீன் குட்டை அமைப்பவர்களுக்கு ரூ.25000 வரை மானியம்!!
மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கும் கிசான் கடன் அட்டை - விண்ணப்பிக்க அழைப்பு !!
Share your comments