வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீத அளவுக்கு குறைத்துள்ளதாக எஸ்பிஐ (SBI) அறிவித்துள்ளது. இதனால், வீடு கட்டுவதற்கு கடன் வாங்கிய பொதுமக்கள், வட்டி விகிதம் குறைந்ததை அடுத்து ஓரளவு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
SBI வெளியிட்ட அறிக்கை:
நாடு முழுவதும் ரூ.30 இலட்சம் முதல் ரூ.2 கோடி வரை வீட்டுக்கடன் பெறுபவர்களுக்கு, அவர்களின் சிபில் புள்ளிகள் (Cibil Score) அடிப்படையில், 0.2 சதவிகிதம் வரை வட்டி விகிதம் குறைக்கப்படும். மேலும் வங்கியின் யோனோ செயலியின் (Yono App) மூலமாக, வீட்டுக் கடன்களுக்காக விண்ணப்பிப்போர்க்குக் கூடுதலாக 0.05 சதவிகிதம் வட்டி (Interest) குறைக்கப்படும். ஆக மொத்தம், வீட்டுக் கடன்களுக்கான வட்டியை 0.25 சதவிகிதம் வரை, State Bank of India குறைந்துள்ளது. அதே வேளையில், நாட்டிலுள்ள மெட்ரோ நகரங்களில், ரூ.3 கோடி வரை வீட்டுக்கடன் பெறுபவர்களுக்கும் இந்தச் சலுகைகள் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண வட்டி விகிதம்:
ரூ.30 இலட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 6.90 சதவீத வட்டியையும், அதற்கு அதிகமான கடன்களுக்கு 7 சதவீத வட்டியையும் எஸ்பிஐ விதித்து வருகிறது. பண்டிகை காலம் நெருங்குவதால், மக்கள் கடன் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை SBI அறிவித்து வருகிறது. முன்னதாக, தனிநபர் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிப்போருக்கான பரிசீலனைக் கட்டணத்தை 100 சதவீதம் தள்ளுபடி (100% Discount) செய்வதாக கடந்த மாதம் எஸ்பிஐ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தமிழகத்தில் ரூ.1,298.20 கோடி முதலீட்டில் 7 தொழில் நிறுவனங்கள்! 8000 பேருக்கு வேலை!
மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான 6 மாதத்திற்கு வட்டிக்கு வட்டி இல்லை! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
Share your comments