ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்கள், தங்கள் வங்கி செயலி மூலம் ஆர்டர் செய்தால் 70% வரை தள்ளுபடி வழங்கப்படும் என SBI அறிவித்துள்ளது.
எனவே இந்த அருமையான வாய்ப்பை SBI வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொண்டுப் பயனடையலாம். நாம் விரும்பும் பொருட்களைக் கடை கடையாக ஏறி இறங்கி, ஆசை ஆசையாக வாங்கி அனுபவித்து மகிழ்ந்தது ஒரு காலம்.
அந்தக் காலமே இப்போது கடையாது. இதற்காக Dress பண்ணவேண்டாம். கடைக்கும் கிளம்பிப் போக வேண்டாம். கையில் மொபைலை எடுத்து, ஆன்லைனின் தேர்வு செய்து ஆர்டர் செய்தால் போதும். நமக்கு விருப்பமானப் பொருட்கள் நம் கைக்கு வந்து சேர்ந்துவிடும். ஆனால் ஓரிரு, நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பது மட்டுமே இந்த நடைமுறையில் உள்ள சிரமம்.
ஆன்லைன் ஆஃபர்கள் (Online offers)
இந்த சிரமத்தைத் தள்ளிவைத்துவிட்டு, பெரும்பாலானோர் ஆன்லைன் ஷாப்பிங் முறைக்கு மாறி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களால் வழங்கப்படும் Offerகள்தான். இதனால் அதிகமானோர் பொருட்களை ஆஃபர்களில் வாங்கி குவிக்கின்றனர்.
இந்தநிலையில், இந்தியாவின் மிக முக்கிய வங்கி ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களுக்கு அருமையான offerயை வழங்கியுள்ளது.
ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ 70% வரை தள்ளுபடி வழங்குகிறது.
இவ்வாறு ஷாப்பிங் செய்ய விரும்பினால், நீங்கள் SBI இன் வங்கிச் செயலியான YONO மூலம் ஆர்டர் செய்யலாம், பின்னர் நீங்கள் பெரும் தள்ளுபடியைப் பெறுவீர்கள். இந்தச் சலுகையைப் பற்றிய தகவலை வழங்கிய வங்கி, ஒரு வாடிக்கையாளர் பிராண்டைப் பொறுத்து YONO செயலி மூலம் ஆர்டர் செய்தால், சிறந்த ஃபேஷன் பிராண்டுகளில் பல தள்ளுபடி சலுகைகளைப் பெறுவார் என்றும் தெரிவித்துள்ளது.
சலுகைப் பெறுவது எப்படி?
Step 1: YONO செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கவும்.
Step 2: அதன் பிறகு உங்கள் மொபைல் எண்ணுடன் பதிவு செய்யவும்.
Step 3: பிறகு இந்த பயன்பாட்டிலிருந்தே Titan, Lifestyle, Trends, Azio மற்றும் Biba போன்ற பிராண்டுகளிலிருந்து ஷாப்பிங் செய்யவும்.
இங்கே நீங்கள் ட்ரெண்டுகளில் 70% வரை தள்ளுபடி வழங்கப்படுவதால், நீங்கள் அதிகமாக ஆர்டர் செய்யலாம் மற்றும் ஷாப்பிங் செய்யலாம்.
மேலும் படிக்க...
முட்டைக்குள்ளும் Diet இருக்கு- தெரியுமா உங்களுக்கு!
நோயாளி வயிற்றுக்குள் சிக்கிய கத்திரி- அறுவை சிகிச்சையில் நடந்த அலப்பறை!
Share your comments