மூத்தக் குடிமக்கள் அதிகம் பயனடையும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு டெபாசிட் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக SBI வங்கி அறிவித்துள்ளது. இதனால் மூத்த குடிமக்கள் அதிகளவில் பயனடைவார்கள் என்றும் அந்த வங்கி நம்புகிறது.
கொரோனா நெருக்கடி காலத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு அதாவது மூத்தக் குடிமக்களுக்கு கூடுதல் வட்டி வழங்குவதற்காக சிறப்பு வைப்பு நிதி திட்டங்களை பல்வேறு வங்கிகள் அறிமுகப்படுத்தின. இவ்வகையில் எஸ்பிஐ வங்கியும் வீகேர் டெபாசிட் (SBI WeCare Deposit) திட்டத்தை அறிமுகம் செய்தது.
இந்த வீகேர் டெபாசிட் திட்டத்தில் மூத்தக் குடிமக்களுக்கு ஸ்பெஷலாக கூடுதல் வட்டி வழங்கப்பட்டது. அதனால் இத்திட்டத்துக்கு மூத்தக் குடிமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. கொரோனா நெருக்கடி குறைந்தபிறகும் வீகேர் டெபாசிட் திட்டம் 2022 மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், வீகேர் டெபாசிட் திட்டம் மேலும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம் மூத்தக் குடிமக்கள் மேலும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
0.8% வட்டி
பொதுவாகவே வைப்பு நிதித் திட்டங்களில் மற்ற வாடிக்கையாளர்களை காட்டிலும் மூத்தக் குடிமக்களுக்கு கூடுதலாக 0.5% வட்டி வழங்கப்படும். எனினும், வீகேர் டெபாசிட் திட்டத்தில் இன்னும் கூடுதலாக 0.3% வட்டி வழங்கப்படும். அதாவது மொத்தம் 0.8% கூடுதல் வட்டி கிடைக்கும்.
உதாரணமாக, 5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரையிலான சாதாரண வைப்பு நிதி டெபாசிட்டுக்கு எஸ்பிஐ வங்கி 5.50% வட்டி வழங்குகிறது. ஆனால், வீகேர் டெபாசிட் திட்டத்திலோ 5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரையிலான டெபாசிட்டுக்கு 6.30% வட்டி வழங்கப்படுகிறது. இதனால் மூத்தக் குடிமக்கள் எளிமையான முறையில் அதிக வருமானம் சம்பாதிக்க முடியும்.
மேலும் படிக்க...
Share your comments