1. செய்திகள்

மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்

T. Vigneshwaran
T. Vigneshwaran

அரசுப்பள்ளிகளில் படித்து தற்போது உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு, உயர்கல்வி அல்லது பட்டயப்படிப்பு படித்து முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இத்திட்டத்துக்காக அரசு 698 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. புதுமைப்பெண் என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

திட்டத்துக்கான தொடக்க விழா சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சென்னை வந்தடைந்தார்.

இன்று நடைபெறும் விழாவில் மாதிரி பள்ளி, தகைசால் பள்ளிகளும் தொடங்கி வைக்கப்படுகின்றன. பின்னர் முதலமைச்சர் ஸ்டாலினுடன், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கெஜ்ரிவால் பார்வையிட உள்ளார். கல்வி உதவித் தொகையை பெற இதுவரை 4 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும் படிக்க:

மதுரை பூ மார்க்கெட்டில் 1 கிலோ மல்லிகை ரூ.2300-க்கு விற்பனை

100 நாள் வேலைத் திட்டம், மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு

English Summary: Scheme to give Rs.1000 to girl students starts today Published on: 05 September 2022, 08:32 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.