பள்ளிப் படிப்பை மட்டுமே பயின்று வரும் மாணவர்களுக்கு, விவசாயத்தைப் (Agriculture) பற்றிய அடிப்படை அறிவை ஊட்டுவது ஆசிரியர்களின் ஆகச் சிறந்த செயல். வளரும் இளம் பருவத்திலேயே விவசாயத்தின் மீது ஆர்வம் வரும் போது, நிச்சயம் விவசாயத்தின் அருமையை மாணவர்கள் வெகு விரைவாக புரிந்து கொள்வார்கள். சில அரசுப் பள்ளிகளில், மாணவர்களே காய்கறிகளை (Vegetables) இயற்கை முறையில் விளைவிக்கும் அற்புத முயற்சிகளை நாம் கண்டு வருகிறோம். மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. அந்த வகையில், வால்பாறையில் அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள், சிறுதானியங்களை (Cereals) சந்தைப்படுத்தி விற்று வருகின்றனர்.
சிறுதானிய சந்தை:
வால்பாறையில் உள்ள ரொட்டிக்கடை அரசு உயர்நிலைப்பள்ளியில், சிறுதானியங்களை சந்தைப்படுத்தி (Marketing) விற்பனை செய்தனர். வால்பாறை, ரொட்டிக்கடை அரசு உயர்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், தமிழ்பாடம் சார்பில் பள்ளி அளவிலான சந்தை நடத்தினர். தலைமை ஆசிரியர் ரமணிபாய் தலைமை வகித்தார். சிறுதானியங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட கூழ் மற்றும் தோட்டத்தில் விளைந்த காய்கறி (Vegetables), பழங்கள், கீரைகள், மிளகு, காபி, மளிகை பொருட்களை காட்சிப்படுத்தினர். பிரியாணி, ரொட்டி, கட்லெட் போன்ற உணவு பொருட்களை மாணவர்கள், தயாரித்து விற்பனை செய்தனர். பள்ளி ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், பத்தாம் வகுப்பு மாணவர்கள் அமைத்த சந்தையில் பொருட்கள் வாங்கினர்.
மாணவர்களின் இந்த சிறுதானிய சந்தை மற்ற மாணவர்களுக்கும் விவசாயத்தின் மீது ஆர்வத்தை அதிகரிக்க வழிவகுக்கும். ஆசிரியர்களின் (Teachers) துணையில்லாமல் இது சாத்தியமில்லை. இனி வரும் காலங்களில், விவசாயத்தின் மதிப்பும், பெருமையும் வளரும் இளம் பருவத்திலேயே அனைவருக்கும் புரிந்து விடும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வாழையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை! வேளாண் கல்லூரி மாணவர்கள் விளக்கம்!
நாம் ஏன் இயற்கை விவசாய முறையைக் கையாள வேண்டும்?
Share your comments