மதுரையில் பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் கஞ்சா பயன்படுத்துவதும், கஞ்சா வியாபாரிகளுக்கு அவர்களே சிலர் ஏஜன்ட்டுகளாக செயல்படுவதும் ஆசிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மதுரையில் பெரியார், ஆரப்பாளையம், அண்ணா பஸ் ஸ்டாண்ட் பகுதி பள்ளிகளில் குறிப்பிட்ட சில மாணவர்கள் குழுவால் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக்கப்படுகின்றனர்.
கஞ்சா (Cannabis)
'கூல் லிப்ஸ்' என்ற சிறிய போதை பாக்கெட்டை வாயில் ஒதுக்கிய மாணவர்கள், தற்போது கஞ்சா பொட்டலங்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. பலர் சிகரெட்டில் கஞ்சா அடைத்து, கழிப்பறைக்கு சென்று புகைக்கின்றனர். இந்த சிகரெட் ரூ.40 முதல் 50 வரை விற்கப்படுகிறது.
மாணவர்களை குறிவைத்து நடக்கும் கஞ்சா விற்பனையில், 17 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் அதிகம் ஈடுபடுகின்றனர். அவர்கள் பஸ் ஸ்டாண்டுகளை தேர்வு செய்து ஏதாவது ஒரு பள்ளியின் சீருடையை அணிந்து மாணவர்கள் போல் நடித்து மாணவர்களுக்கு கஞ்சா சபலத்தை தூண்டி போதை பாதைக்கு இழுக்கின்றனர்.
ஆசிரியர்கள் கூறியது
பள்ளிகளில் அடிக்கடி கழிப்பறை செல்லும் மாணவர்களை கண்காணிக்கும் போது கஞ்சா பயன்படுத்துவதை உறுதி செய்கிறோம். அவர்களை தனியே அழைத்து 'கவுன்சிலிங்' அளித்தாலும் திருந்துவதில்லை. உடன் படிக்கும் மாணவர்களையும் கெடுக்கின்றனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் ஆசிரியைகள் கடும் மனஉளைச்சலில் உள்ளனர்.
சட்டரீதியாக புகார் அளித்தால் அவர்கள் வாழ்க்கை பாதிக்கும் என்ற எண்ணத்தில் கல்வி அதிகாரிகள், நிர்வாகம் எங்களின் கைகளை கட்டிப்போட்டு விடுகின்றன. சில பள்ளிகளில் கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர் குழுவிற்கு மாணவர்களே ஏஜென்ட்களாக மாறுகின்றனர். பணத் தேவைக்கு மாணவர்கள் கொண்டுவரும் 'பாக்கெட் மணி'யை பறிப்பது என சம்பவங்கள் நடக்கின்றன. போதை பாதைக்கு மாறும் மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மேலும் படிக்க
கந்துவட்டி கொடுமையா? தப்பிக்க வழிகாட்டும் சட்டம்!
இலவசங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு!
Share your comments