1. செய்திகள்

பள்ளிகள் திறப்பு: ஸ்டாலின் அறிவிப்பு!!

T. Vigneshwaran
T. Vigneshwaran
MK Stalin

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் உரையாற்றினார். இந்தச் சந்திப்பில் குடியரசுத் தலைவரிடம் மனோகர் தேவதாஸ் எழுதிய 'Multiple Facets of My Madurai' என்ற புத்தகத்தைப் ஸ்டாலின் பேசினார்.

இந்த சந்திப்பு முடிந்தபிபின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மு.க.ஸ்டாலின், “சென்னை மாகாண சட்டசபை அமைந்து நூறாண்டுகள் ஆகியதையடுத்து கொண்டாடப்படும் சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளவும், சட்டமன்றத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படத்தை திறந்து வைக்கவும் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளேன் என்று தெரிவித்தார்.

மதுரையில் கலைஞர் பெயரில் திறக்கவிருக்கும் நூலகம், சென்னை கிண்டியில் அமையவிருக்கும் அரசு மருத்துவமனை, இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை எட்டியதை நினைவுகூரும் வகையில் கடற்கரைச் சாலையில் அமையவிருக்கும் நினைவுத்தூண் ஆகியவற்றின் அடிக்கல் நாட்டு நிகழ்வுகளிலும் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளேன் என்று கூறினார்.

எழுவர் விடுதலை குறித்து ஸ்டாலின் குடியரசுத் தலைவரிடம் பேசுவார் எதிர்பாக்கப்பட்டது,அனால் அவர் சட்டப் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். ஏழு பேர் விடுதலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து எழுவர் விடுதலைக்காக குரல் கொடுப்போம் என்றும் கூறினார்.

பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு எப்போது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், கொரோனா தொற்றின் மூன்றாம் அலை வரக்கூடாது என்பது தான் அனைவரின் எண்ணமாக உள்ளது. ஒருவேளை வந்தால் அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கமுடியாத நிலைமை உள்ளது. இது தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க:

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு! 2079, 29 பேர் பலி!

வட்டியே இல்லாமல் ரூ. 60 ஆயிரம் வரை கடன்: அவசர தேவைக்கு உதவும் Paytm!!

சிறிய LPG சிலிண்டர் புக் செய்ய சான்று தேவையில்லை

English Summary: Schools open: Stalin's announcement !! Published on: 19 July 2021, 02:58 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.