Schools Reopening In TamilNadu
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அதை மீண்டும் மூடுவதற்கு கோரிக்கைகள் எழுகின்றன.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு , செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. அதன்படி, 9 10 11 12 ஆகிய வகுப்புகளுக்கு முதற்கட்டமாக பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே, பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் செப்டம்பர் 1க்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுத்தியது மேலும் வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. அதனை தொடர்ந்து பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்பட்டுள்ள நிலையில் அரியலூரில் இரண்டே நாட்களில் இரண்டு பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்ச கணக்கான மாணவி, மாணவிகள் பள்ளிக்கு பாதுகாப்பாக சென்று வந்தாலும் ஓரிரு மாணவர்களுக்கு தொற்று ஏற்படும் காரணத்தால் அது பூதாகாரமாகிவிடும் என்பதால் மீண்டும் பள்ளிகளை மூட அரசுக்கு நிர்பந்தம் ஏற்படுமோ என்ற சூழல்தான் தற்போது நிலவுகிறது. ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்படுவதான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்னும் இருப்பதால் அடுத்த விசாரணையில் மாணவிகளின் கொரோனா பாதிப்பை சுட்டிக்காட்டி நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்கலாம் என்பதிலும் எந்த அச்சயமும் இல்லை.
அரியலூரில் மட்டுமல்ல, கடலூரில் ஆசிரியர் ஒருவருக்கும், நாமக்கல்லில் பள்ளி மாணவி ஒருவருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளதால். உடனே, அப்பள்ளிகளில் உள்ள மற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா சோதனை செய்ததில் தொற்று இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையிலும், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு நாட்களில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 30% மாணவர்கள் பள்ளிக்கு வர வில்லை என்று மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் அரசும், பள்ளி நிர்வாகமும் இதனை எப்படி கையாள போகிறார்கள் என்பதிலே தொடர்ந்து பள்ளிகள் இயங்க முடியும்.
மேலும் படிக்க:
Share your comments